முல்லை கதாபாத்திரத்தில் காவியாவுக்கு பதிலாக இனிமேல் இவர்தான்.! ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்.

pantiyan stor

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசமான கதை உள்ள திருப்பங்களுடன் பல எபிசோட்கள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம் முல்லை மற்றும் கதிர் இவர்களின் கேரக்டரை வைத்து தான் முழுவதுமாக ஒலிபரப்பாகி வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இதற்கு மேல் முல்லை கதாபாத்திரத்தில் காவியாவுக்கு பதிலாக இந்த நடிகைதான் எனக்கூறி வைரலாகி வருகிறார்கள் அதனைப் பற்றி தற்போது பார்ப்போம்.

அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் சுவாரசியமாக எதற்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.  அதோடு இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருவதால் தொடர்ந்து பல எபிசோடுகளை தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் எப்பொழுதுமே கிடைக்காது என மருத்துவர் கூற அதனை தெரிந்து கொண்ட முல்லை தொடர்ந்து மிகவும் வருத்தப்பட்டு அழுதுகொண்டே இருக்கிறாள் இதன் காரணமாக குடும்பத்தினர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை வைத்து முல்லைக்கு ட்ரீட்மெண்ட் செய்து எப்படியாவது குழந்தை பெறும் பாக்கியத்தை தரவேண்டும் என்பதற்காக குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இணைந்து முடிவெடுத்து உள்ளார்கள்.

இவ்வாறு இதற்கு மேல் கதிர் மற்றும் முல்லை  கேரக்டரை வைத்து தான்  இனிவரும் எபிசோடுகள் அமைய உள்ளது.  இப்படிப்பட்ட நிலையில் கதிருக்கு ஜோடியாக முதலில் சித்ரா நடித்து வந்தார் இவர் இறந்த காரணத்தினால் இவருக்கு பதிலாக காவியா நடித்து வருகிறார்.

pantiyan stores 01
pantiyan stores 01

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடித்து வந்த பிரபல நடிகையான தேஜஸ்வினி நடிக்கயிருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவுள்ளது.ஆனால் கண்டிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் காவியா தான் நடிப்பார் இவருக்கு பதிலாக மற்றொரு நடிகையை ஏமாற்றிய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.