விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில் தொடர்ந்து பல எபிசோடுகள் தாண்டியும் தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வைப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அமோக வரவேற்பை பெற்றுவரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியல் தமிழில் மட்டும் தான் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சீரியலின் முக்கிய நோக்கம் கூட்டுக் குடும்பத்தை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில் மூன்று அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் தாய் போல் பார்த்துக் கொள்ளும் அண்ணி,மருமகள்களின் ஒற்றுமை மற்றும் இந்த குடும்பத்தை தாங்கும் எதிரிகளை சமாளிக்கும் விதம் என அனைத்து தத்துரூபமாக காட்டும் சீரியலாக அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் மூர்த்தி புதிய வீடு கட்டலாம் என்று முடிவு செய்து அனைவரிடமும் கூற அதனை நினைத்து மகிழ்ச்சியடைந்த மீனா வீடு எப்படி எல்லாம் கட்ட வேண்டும் என ஒரு பிளான் போட்டுக் கொடுத்தாள். எனவே மீனா மிகவும் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் திடீரென்று குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என தெரியவந்ததும் முல்லை மிகவும் வருத்தப்பட்டாள் வீடு கட்ட இருக்கும் பணத்தை வைத்து முலைக்கு ட்ரீட்மெண்ட் செய்து எப்படியாவது குழந்தை பாக்கியத்தை பெற்று தந்து விடலாம் என குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முடிவு செய்து இருந்தார்கள் ஆனால் இதனை விரும்பாத மீனா அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் தற்பொழுது வீடு கட்டுவோம் என கூறினாள்.
பிறகு சமீப காலங்களாக மூர்த்தி ஜீவாவை தனது கடைக்கு வரவேண்டாம் உனது மாமனார் கடை மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள் என கூறியதால் ஜீவா ஃபுல்லாக குடித்து வந்து மூர்த்தியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான் இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று வயிறு வலிக்க அவளை அறியாமலேயே கர்ப்பமாகி விடுகிறாள் இதனை நினைத்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.