தற்பொழுதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் சினிமா நடிகைகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு சீரியல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் நாள்தோறும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருவதாக எளிதில் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது.
நார்மலாக போட்டோ ஷூட் நடத்தாமல் மிகவும் வித்தியாசமாக நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது காவியா அறிவுமணி நடத்திய போட்டோ சூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் காவியா. அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு வரும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாள்தோறும் சோசியல் மீடியாவில் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது கிராமத்து பெண் போல் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
பாவாடை தாவணியில் கூரை வீட்டில் சமைப்பது போலவும், செங்கல் தூக்குவது போலவும், அந்த கிராமத்து பெண்களின் வெக்கத்தை தனது முகத்தில் மிகவும் அழகாக இருக்கும் போட்டோ ஷூட்டை நடத்திவுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காவியாவை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.