பல பிரச்சனைகளில் சிக்கி தவிப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.

pantiyan stores
pantiyan stores

தற்பொழுது பல பிரச்சனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பாக்யம் இருக்காது என்பதை மருத்துவர் கூறியதால் குழந்தை பெறும் பாக்கியத்தை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நினைத்து 5 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்கள்.

வீடு கட்டுவதற்கு என்று வைத்திருந்த பணத்தை வைத்து முல்லைக்கு ட்ரீட்மெண்ட் செய்து வருகிறார்கள். எனவே டாக்டர் முல்லையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதால் குடும்பத்தினர்கள் முல்லையை எந்த ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை பிறகு பாத்ரூம் கூட அவர் நடந்து செல்லக் கூடாது என்று கதிர் தூக்கி கொண்டு செல்கிறான்.

சாப்பாடு ஊட்டி விடுவது, மாத்திரை கொடுப்பது என மிகவும் கவனமாக முல்லையை பார்த்துக் கொள்கிறான் எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கதிரை நினைத்து பெருமைப் பட்டு வருகிறார்கள்.ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே இதேபோல் என்னை பார்த்துக் கொள்ளவில்லை என பொறாமை பட்டு வருகிறார் மீனா.

பிறகு இந்த சீரியல் முடிய போகிறது என்று பல ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் இயக்குனர் இதற்குமேல் இவர்களுக்கு எப்படி குழந்தை பாக்கியம் கிடைக்கிறது அந்த குழந்தையை எப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துதான் முழுவதுமாக இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இவ்வாறு இந்த கதையை மட்டுமே வைத்து வந்தால் ரசிகர்கள் மத்தியில் இது போரடித்து விடும் எனவே விரைவில் சில டிப்ஸ்களும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.