பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை இனி பாரதிகண்ணம்மா சீரியலில்.! இனி தான் இருக்கு ட்விஸ்டே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. முக்கியமாக சில சீரியல்களுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த சீரியல்கள் தான் பாரதிகண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்.

இரண்டு சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்துவரும் நிலையில் தற்போது ஸ்டோர்ஸ் திறப்பு விழா மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாகவே ஒரு சீரியலில் நடித்து வருபவர்கள் மற்றொரு சீரியலில் கலந்து கொண்டும் வருகிறார்கள்.இந்த இரண்டு சீரியல்களும் கலந்து கொண்டு வருவதால் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் விழாவிற்கு பலர் வருகை தர உள்ளார்.

இதனை ரசிகர்களும் அதிக அளவில் எதிர்பார்த்து வரும் நிலையில் சமீபத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகனான பாரதி என்ற அருண் பிரசாத்துடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலிற்கு முன்பு காவியா பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் எனவே இவர்கள் ஏற்கனவே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

bharathi kannama pantiyan stores
bharathi kannama pantiyan stores

இவ்வாறு இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்து இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடக்க இருக்கும் கடை திறப்பு விழாவிற்கு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பாரதி கலந்துகொள்ள இருக்கிறாரா.? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment