விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் தற்பொழுது மூன்று குடும்பமாக பிரிந்திருக்கும் நிலையில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மீனாவின் தங்கை திருமணத்தின் பொழுது ஜீவா-மீனா பெயரில் மொய் எழுதிய காரணத்தினால் ஜீவா இந்த வீட்டிலிருந்து பிரிந்துள்ளார். மேலும் இதற்கு மேல் அந்த வீட்டிற்கு போக முடியாது எனவும் இனிமேல் அவர்கள் தான் உங்களுடைய தம்பிகள் நான் கிடையாது எனவும் கூறிவிட்டு தன்னுடைய மாமனாருடன் இருந்து வருகிறார்.
மீனாவின் அப்பா ஜகார்த்தனன் இதனை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய மகளை தனது வீட்டில் இருக்க வைத்துக் கொள்கிறார். மேலும் தற்பொழுது இவர்களுடைய சூப்பர் மார்க்கெட்டிற்கு ஜீவா செல்ல இருக்கும் நிலையில் ஜகார்த்தனன் அவருக்கு புல்லட்டை கொடுத்த அதில் அனுப்பி வைக்கிறார் இதனை நினைத்து மீனா பெருமைப்படுகிறார்.
இவர்களை அடுத்து கண்ணன் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் இருவரும் படம் பார்ப்பதற்காக தியேட்டர் செல்கின்றனர். ஆனால் இவர்களை நினைத்து கதிர், தனம், மூர்த்தி, முல்லை ஆகியோர் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் தங்கை திருமணத்தின் பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது கல்யாண ஷூட்டிங்கில் மீனா மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டியுள்ளார் அதன் பிறகு அதே தாலியை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் காட்டுகிறார். அந்த தாலியை கட்டிவிட்டு ஜீவாவுக்கு இதற்கு மேல் இரண்டு பொண்டாட்டி எனக் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..
#PandianStores pic.twitter.com/riGlv5Xfqv
— Parthiban A (@ParthibanAPN) March 30, 2023