Pandiyan stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்து வந்த தனத்தின் ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கும் நிலையில் இந்த வாரம் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இருந்ததால் உடனடியாக ஆப்ரேஷன் செய்தாக வேண்டும் என டாக்டர் கூறியிருந்தார்கள். எனவே தனம் ஒரு வாரம் கழித்து ஆபரேஷன் செய்து கொள்கிறேன் என முடிவெடுத்த நிலையில் பிறகு ஐஸ்வர்யா கண்ணனுக்கு வளைய காப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
மேலும் இவர்கள் கஸ்தூரியிடம் வாங்கி இருந்த கடனையும் தனம் அடைத்த நிலையில் பிறகு கண்ணன் லஞ்சம் வாங்கியதாக மேல் அதிகாரி சூழ்ச்சியினால் லஞ்ச ஊழியர்களிடம் மாட்டிக் கொண்டு அரெஸ்ட் செய்யப்பட்டார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவிற்கு குழந்தையும் பிறந்தது.
பிறகு ஜாமினில் கண்ணன் வெளிவந்த நிலையில் இந்த நேரத்தில் தனத்திற்கு இருக்கும் பிரஸ்ட் கேன்சர் குறித்து மீனா முல்லையிடமும் கூறுகிறார். எனவே இவர்கள் இருவரும் அனைவருக்கும் தெரியாமல் தனத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்ய முடிவு எடுக்கின்றனர். அப்படி முதலில் தனம் வயிறு வலி வந்தது போல் நடிக்க மருத்துவர் முதலில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்கின்றனர்.
அந்த வகையில் இவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது பிறகு அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மீனா, முல்லை தனத்தின் பிரஸ்ட் கேன்சர்க்கான ஆபரேஷனை செய்கிறார்கள். அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனத்திற்கு ஆபரேஷன் நடைபெற டாக்டர் ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக கூறுகிறார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மீனா, முல்லை தனத்தினை பார்ப்பதற்காக செல்ல அங்கு இனிமேல் எந்த பிரச்சனையும் கிடையாது என்று தனத்திடம் கூற அதற்கு தனம் உங்களால்தான் இது அனைத்தும் நடந்தது என்று சொல்ல நீங்கள்தான் நோயை எதிர்த்து போராடினீங்க என்று முல்லை கூற இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.