வைத்து புள்ள காரி நடுரோட்டில் நின்னு கதறுராட உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா கண்ணனை செவுளில் அறைந்த மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandiyan-stores-289
pandiyan-stores-289

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் பேங்க் ஆஃபீஸர்களிடம் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்காததால் கண்ணனை பேங்க் ஆபீஸர்கள் அடிக்கிறார்கள் இதனால் கதிர் பேங்க் ஆபீஸர்களை அடித்து விடுகிறார் இதன் விளைவாக மூர்த்தி தனம் முல்லை கதிர் என அனைவரும் கண்ணன் வீட்டு வளைகாப்பிற்கு கிளம்பி கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்து கதிரை அரஸ்ட் செய்து கூட்டிக்கொண்டு போகிறார்கள்.

நடுரோட்டில் நின்னு முல்லை எவ்வளவோ கெஞ்சியும் அழுதும் போலீஸார்கள் அவரை விடுவது போல் தெரியவில்லை இதை பார்த்த மூர்த்தி மனமடைந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார் அங்கு நடந்த அனைத்தையும் போலீஸ் கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் போலீசிடம் மூர்த்தி எவ்வளவு கூறியும் கதிரை வெளியே விட மறுக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பேங்க் ஆபிஸர்கள் கேசை வாபஸ் வாங்கினால் மட்டுமே வெளியே விட முடியும் எனவும் கூறிவிடுகிறார்கள்.

இல்லையென்றால் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் எஃப் ஐ ஆர் போட்டாச்சு என கூறிவிட்டு போலீஸ் பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் கதிரின் மாமனார் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார் அவரிடமும் நடந்த விஷயத்தை கூறுகிறார்கள் போலீஸிடம் தம்பி மீது உள்ள பாசத்தால் அடித்து விட்டார் மன்னித்து விட்டு விடுங்கள் என கூறுகிறார் ஆனாலும் போலீஸ் பாசத்தை அடிச்சு தான் காமிக்கணுமா என போலீசார் கூற அதற்கு கதிர் சட்டம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசலாமா காசு கொடுக்கலைன்னா அடிப்பாங்களா என கதிர் பேசுகிறார்.

இப்பவே இவ்வளவு தெனாவட்டா நீ பேசுறியா என போலீஸ் இன்னும் கோவம் அடைகிறார்கள். அடுத்த காட்சியில் மீனா கதிர் வீட்டுக்கு வருகிறார். ஆனால் அதற்கு முன்பே ஐஸ்வர்யா காயத்தை பற்றி யார் கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் அவர்கள் எல்லாம் வருத்தப்படுவார்கள் என ஐஸ்வர்யா கூறுகிறார். ஆனாலும் ஐஸ்வர்யாவின் சித்தி கண்ணனை மிகவும் கேவலமாக பேசுகிறார்.

மீனா கண்ணனுக்கு அடிபட்டு இருந்ததை பற்றி கேட்கிறார் ஆனால் ஐஸ்வர்யா ஏதோ சொல்லி மழுப்புகிறார் அந்த சமயத்தில் மூர்த்தி வந்து வீட்டில் கதவை தட்டி கண்ணனை ஆக்ரோஷத்துடன் கூப்பிடுகிறார். கண்ணன் வெளியே வந்து பார்க்கும் பொழுது மூர்த்தி கோபமாக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கண்ணனை செவுலில் அறைந்து உனக்கு அவ்வளவு ஆகிடுச்சா நீ எக்கடாது கெட்டுப் போக வேண்டியதுதான எதுக்கு இதுல கதிர மாட்டி விட்ட என  கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

உடனே ஐஸ்வர்யாவின் சித்தி பேங்க்காரர்கள் வந்தாங்களே அத பத்தி பேசுகிறீர்களா அது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க உடனே மூர்த்தி இன்னைக்கு பேங்க் காரன் வருவான் நாளைக்கு வட்டிக்காரன் வருவான் எந்த கருமாவது எவனாவது வந்துட்டு போகட்டும் இதுல கண்ணா அவன் வேலையை தானே பாத்துட்டு இருந்தா அவன் பொழப்பையும் கெடுத்து ஏன் அவன் வாழ்க்கையை வீணாக்குற. நிம்மதியா வாழனும் தானே தனி வீட்டுக்கு வந்தீங்க அப்புறம் ஏன் எங்க நிம்மதியை கெடுக்குறீங்க நீங்க பாட்டுக்கு எப்படியாவது வாழ்ந்துட்டு போக வேண்டியது தானே என மூர்த்தி கண்ணனை பார்த்து அசிங்க அசிங்கமாக கேட்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நிறை மாத கர்ப்பிணி ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் அவளே ப்ரெக்னன்ட்டா இருக்கா கொஞ்சமாச்சும் உனக்கு புத்தி இருக்கா அவங்க நிலைமை நினைத்து பார்த்தியா அப்படி கண்ணீருடன் முல்லை கதறுகிறார் அவருக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் என ஆக்ரோஷத்துடன் கண்ணனை அடித்து பேசிக் கொண்டிருக்கிறார் மூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.