நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதனால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. மேலும் தொடர்ந்து சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக சில காலங்களாக வாழ்ந்து வந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து சல்லி சலியாக உடைந்துள்ளது. அதாவது சமீபத்தில் மீனாவின் தங்கை திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் ஜீவா-மீனா பெயரை மட்டும் விட்டு விட்டு கண்ணன், கதிர், மூர்த்தியின் அனைவருடைய பெயரிலும் மொய் எழுதப்பட்டது.
எனவே இதனைப் பற்றி தெரிந்து கொண்ட ஜீவா தன்னுடைய மனதில் இருந்து அனைத்து ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்த நிலையில் உங்களுக்கும் எனக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை அந்த வீட்டிற்கு இதற்கு மேல் வரமாட்டேன் இவர்கள் இருவரும் தான் உங்களுடைய தம்பிகள் என கூறிய நிலையில் பிறகு அனைவரும் மண்டபத்தை விட்டு வீட்டிற்கு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் வீட்டிற்கு வந்தவுடன் தனம் கண்ணனை பார்த்து எல்லாம் உன்னால் தான் கண்ணா என கூற உடனே ஐஸ்வர்யா நிறுத்துங்க அக்கா சும்மா விட்டா பேசிக்கிட்டே போறீங்க எப்ப பார்த்தாலும் கண்ணனையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க என சொல்ல பிறகு கண்ணன் 40000 சம்பளம் வாங்குவதை பற்றி முல்லை கூறுகிறார். உடனே ஐஸ்வர்யா மொத்த பணத்தையும் உங்கள்ட்ட குடுத்துட்டு ஒவ்வொன்னுக்கும் உங்க கிட்ட வந்து கையேந்தி நிற்கணுமா என கூறிவிட்டு நாங்களும் இங்க நிறைய அட்ஜஸ்ட் பண்ணி கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம் என சொல்ல உடனே மூர்த்தி யாரும் இங்கு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம் வீட்டை விட்டு கிளம்புங்கள் என கூற பிறகு ஐஸ்வர்யா துணிகளை எடுத்துக்கொண்டு வருகிறார்.
அப்பொழுது வீட்டை விட்டு போவதாக ஐஸ்வர்யா கூற கதிர் ரொம்ப தப்பா போயிட்டு இருக்கு கண்ணா என சொல்ல கண்ணன் ஐசு என கூப்பிட அதற்கு ஐஸ்வர்யா உன்ன பத்தி கவலைப் படாத இந்த குடும்பம் வேணுமா? இல்ல நான் வேணுமாக? என கேட்கிறார் பிறகு கண்ணனும் வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யாவுடன் செல்கிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.