விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிவாரென எதிர்பார்த்த நிலையில் தற்போது அதற்கு ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜீவா சமீப காலங்களாக பெட்ரோல் போட கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் மூர்த்தியும் பணம் தராமல் இருந்து வந்தார். எனவே ஜீவா பணமில்லாத காரணத்தினால் மூர்த்தியின் மீது கோபத்தில் இருந்து வந்த நிலையில் தன்னுடைய மாமனாரிடம் இதனைப் பற்றி சொல்லி புலம்பி இருந்தார்.
எனவே ஜாார்த்தனனும் மாப்பிள்ளை அவருடைய குடும்பத்தை விட்டு பிரிந்து தன்னுடன் மகளை அழைத்துக் கொண்டு வந்து விடுவார் என எதிர்பார்த்து ஜீவாவின் மேல் அதிக பாசம் இருப்பது போல் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை சரியாக மூடாமல் போனதால் மூர்த்தி கோபத்தில் திட்ட அதற்கு ஜீவாவும் கோபப்பட்டு திட்டி விடுகிறார்.
பிறகு ஜீவா யாரிடமும் பேசாமல் வீட்டில் திண்ணையில் படுத்துக்கொள்ள அவருக்கு துணையாக கதிரும் படுத்து கொள்கிறார். பிறகு காலையில் எழுந்தவுடன் ஜீவா மீனாவுடன் கல்யாணத்துக்கு கிளம்ப அந்த நேரத்தில் மூர்த்தி ஜீவாவிடம் கல்லா சாவியை கொடுத்துவிட்டு நீயே வச்சுக்கடா இதை வைத்து நான் என்ன பண்ண போறேன் நீயே வச்சுக்க என கூற இதனால் இருவரும் பாச மழையை பொழிந்து கொள்கின்றனர்.
பிறகு ஜீவாவும் அது எல்லாம் வேண்டாம் அண்ண என சாவியை கொடுத்துவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு ஜகார்த்தனன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற மகிழ்ச்சியுடன் மீனாவை அவருடைய அம்மாவை பார்க்கிறார். அந்த நேரத்தில் அவர் மத்தவங்களாம் வரலையா என கேட்க இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.