விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இவர்களுடைய மகிழ்ச்சிக்கு முல்லை காரணமாக இருந்து வரும் நிலையில் அனைவரும் முல்லையை கொண்டாடி வருகிறார்கள்.
அதாவது முல்லைக்கு குழந்தை பெறுவதற்கான பாக்கியம் இல்லை என மருத்துவர் கூறிய காரணத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்தார்கள். இவ்வாறு செய்தும் முல்லை கர்ப்பமாகவில்லை இதனால் இவர்களுக்கிடையே சண்டை ஏற்பட பிறகு கதிர் முல்லையை அழைத்துக் கொண்டு தனியாக வந்து விடுகிறார். மேலும் 5 லட்ச ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என சவால் விட்டிருந்த நிலையில் பிறகு அந்த கடனையும் அடைக்கிறார்.
பலரும் முல்லைக்கு குழந்தை பிறக்காது என அசிங்கப்படுத்திய நிலையில் தற்பொழுது முல்லை கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது முல்லைக்கு இரண்டு மாதங்களாக பீரியட் வரவில்லை என்றும் தலை சுத்தல் மயக்கம் போன்றவை இருப்பதாகவும் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவந்த நிலையில் பிறகு ப்ரெக்னன்ட் கிட் மூலம் டெஸ்ட் எடுக்கும் பொழுது முல்லை கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது.
இருந்தாலும் மருத்துவரை சந்தித்து உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தில் இருப்பவர்களிடம் கூறலாம் என தனத்திடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வருகிறார். பிறகு டாக்டர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதைக் கூற இந்த நேரத்தில் கதிரும் வர பிறகு கதிரிடம் மருத்துவர் முல்லை கர்ப்பமாக இருப்பதைக் கூற கதிர் இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
வீட்டிற்கு வந்து இதுவரையிலும் குழந்தை பிறக்காது என முல்லையை அவமானப்படுத்திய அனைவருக்கும் பதில் வந்துவிட்டது எனக்கூறி அனைவரிடமும் முல்லை கர்ப்பமாக இருப்பதை கூற அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். கதிருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க பிறகு கதிர் முல்லையை தனியாக அழைத்து சென்று கட்டி அணைத்து அழுகிறார் இவ்வாறு முல்லை கர்ப்பமான நிலையில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.