விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து ஒற்றுமையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் பெரிய அடி விழுந்து உள்ளது எனவே அனைவரும் மிகவும் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.
அதாவது முல்லை தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என 5 லட்சம் மருத்துவ செலவையும் செய்த நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை இப்படிப்பட்ட நிலையில் குழந்தை பாக்கியம் கிடையாது என நினைத்து வந்த நிலையில் தற்போது திடீரென முல்லை கர்ப்பமாக இருக்கிறார் இது ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அனைவரும் முல்லையை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் வழக்கம் போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெஸ்ஸில் உணவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தற்பொழுதுதான் இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வியாபாரம் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் உணவுகள் நல்லபடியாக சமைக்கப்படுகிறதா என்பதனை பார்ப்பதற்காக அதிகாரிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலுக்கு வருகிறார்கள். அங்கு உணவு சமைப்பது சரியான முறையில் இல்லை என்றும் இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என கூறி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலை சீல் வைத்து மூடுகிறார்கள்.
இதனால் முல்லை தனம் என அனைவரும் பதறிப் போக பிறகு கதிர், ஜீவா, மூர்த்தி அனைவரும் வருகிறார்கள் இதனை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைய இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டல் மூடுவதற்கு முக்கிய காரணம் ஜகார்த்தனனாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூடிய நிலையில் மேலும் இவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது ஹோட்டலையும் மூட வைத்திருக்கிறார். எனவே இதனை மீனாவின் அப்பா தான் செய்தது என விரைவில் கண்டுபிடித்து அவரை ஒரு வழி நான்கு அண்ணன் தம்பிகளும் செய்யப் போகிறார்கள்.