தனி ஆளாக நின்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் தாங்கும் மருமகள்.! தனம்லா சும்மா..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வருகிறது.

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூன்று மகள்களும் அடுத்தடுத்து கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் மீனா இவர்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாடி வருகிறார். இதுவரையிலும் மீனா வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஒப்பியடித்து வந்த நிலையில் தற்பொழுது இவர் வேலை செய்வதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

முல்லை கர்ப்பமாக இருந்த நிலையில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா இவரை எடுத்து தற்போது தனம் என அடுத்தடுத்து இவர்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மீனா அனைவரையும் உட்கார வைத்து அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறார்.

இதுவரையிலும் மூத்த மருமகளாக தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் பொறுப்புடன் மிகவும் அக்கறையாக தனம் பார்த்து வந்தார். ஆனால் திடீரர் தினம் கர்ப்பமான நிலையில் அனைத்து பொறுப்புகளையும் மீனா ஏற்று மிகவும் அதிரடியாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்.

இவ்வாறு ஒட்டுமொத்த குடும்பத்தின் வேளையும் தனியாக மீனா பார்த்து வரும் நிலையில் இதனை பார்த்து மீனாவின் கணவர் ஜீவா ஆச்சரியப்படுகிறார். ஆனால் சொகுசாக வளர்ந்து இவ்வளவு வேலை செய்றாலே என ஜீவா நினைத்துக் கொண்டு மீனாவிற்கு துணையாக மீனாவின் பக்கத்திலிருந்து அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சந்தோஷமாகவும் பார்த்துக் கொள்கிறார்.

இவ்வாறு மீனா வேலை செய்வதை பார்த்து அவருடைய அம்மா ஆச்சரியப்படுகிறார். மீனா தொடர்ந்து பல வேலைகளை செய்து தன்னுடைய குடும்பத்தினர்களை நன்றாக பார்த்து வந்தாலும் சில நாட்கள் கழித்து நான் என்ன இந்த வீட்டின் வேலைக்காரி என சண்டை போட அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.