விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது எப்படியாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்து பழி வாங்க வேண்டும் என மீனாவின் அப்பா திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களும் வரும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்து வருகிறார்கள். மேலும் ஜகார்த்தனன் நான்கு அண்ணன் தம்பிகளையும் பிரித்து மூர்த்தியை தனியாக இருக்க வைத்து பழி வாங்க வேண்டும் என முடிவெடுத்து உள்ளான் இப்படிப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவின் தங்கைக்கும் மல்லிகாவின் மகனுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
எனவே தன்னுடைய அக்காவை அழைத்துச் செல்ல வேண்டும் என மீனாவின் தங்கை தன்னுடைய அம்மாவுடன் வருகிறார் அப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருக்கும் பாயாசத்தை குடிப்பதற்காக அந்த பாயாசம் இருக்கும் பாத்திரத்தை தூக்குகிறான் அப்பொழுது மீனாவின் அம்மா வந்து இங்கே இருக்கிற எல்லா வேலையும் நீதான் செய்தியா என கத்துகிறார் பிறகு மீனாவும் தன்னுடைய குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் நான் ஒரு வேலையும் செய்யவில்லை அக்கா மட்டும் தான் இந்த வேலை எல்லாம் செய்றாங்க எனக் கூற பிறகு மீனாவை திருமணத்திற்கு அழைக்கிறார்கள்.
மீனா வர முடியாது என கூறிவிட்டார் மேலும் மீனாவின் தங்கை அழுது கூப்பிட்டும் மீனா வர முடியாது என சொல்ல பிறகு ஜகார்த்தனன் ஜீவாவை சந்தித்து திருமணத்திற்கு அழைக்கிறார் எல்லாரும் மூத்த மாப்பிள்ளை எங்க என கேட்பாங்க எனவே மீனாவை அழைச்சிட்டு வந்துடுங்க என கூற ஜீவா நான் வர முடியாது நீங்க வரப்ப எல்லாம் அவமானப்படுத்துவீங்க நான் வரணுமா எனக்கு கூட நான் உங்களை எதுவுமே சொல்லவில்லை எனது கூறுகிறார் மேலும் ஜீவா என்னை சண்டை போட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என் குடும்பத்தில் இருப்பவர்களை ஏதாவது செய்தால் எனக்கு கோபம் வந்துவிடும் என ஒரே முடிவாக கூறிவிடுகிறார்.