கடையை காலி செய்து விட்டு நடுத்தெருவிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! உச்சகட்ட மகிழ்ச்சியில் ஜகார்த்தனன்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது அந்த வகையில் காயத்ரி மற்றும் மல்லி தனத்திடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர் அப்பொழுது வீட்டில் யாரும் இல்லையா என கேட்க அவங்க எல்லாரும் கடைக்கு சென்று இருப்பதாக சொல்கிறார்.

அதற்கு காயத்ரி கடையே இல்லை அப்புறம் என்ன என கேட்க உடனே முல்லை சூப்பர் மார்க்கெட்டை காலி செய்ய சென்று இருப்பதாக சொல்கிறார் பிறகு கஸ்தூரி, மல்லி நக்கலாக பேச தனம் நான் காபி கொடுக்கிறேன் என சொல்கிறார். உடனே முல்லையிடம் மல்லி இதெல்லாம் உனக்கு தேவையா என கேட்க உனக்கு என்ன என முல்லை கோபமாக சத்தம் போடுகிறார்.

இதனை தொடர்ந்து மறுபுறம் மூர்த்தி ஜீவா, கதிர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கின்றனர் அவ்வளவு ஆசையாக கட்டின கடையை நினைத்து வருத்தப்படுகிறார்கள் மேலும் அப்படியே பொருட்களை எல்லாம் எடுக்க பிறகு லாரியில் ஏற்றுகிறார்கள் உடனே அந்த நேரத்தில் ஜகார்த்தனன் தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார். அண்ணன், தம்பிகள் சூப்பர் மார்க்கெட்டை பார்த்து வருத்தப்படுகின்றனர்.

பிறகு கஸ்தூரி மல்லி, ஜகார்த்தனனை பார்க்க வருகின்றனர் அப்பொழுது நிச்சயதார்த்தம் பற்றி பேச பிறகு நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு எல்லாம் செய்ய வேண்டும் என சொல்ல சேலை எடுக்க வேண்டும் என மல்லி சொல்ல அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஜஹார்த்தனன் கூறுகிறார் மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீங்க வந்தால் போதும் என சொல்ல கலை அவரு இப்படிதான் என சொல்கிறார்.

என்னாச்சு என ஜகார்த்தனன் கேட்க மல்லி அதெல்லாம் சரியா வராது என சொல்கிறார் அப்பொழுது கஸ்தூரி அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை போயிருச்சாம் என சொல்ல ஜகார்த்தனன் நக்கல் அடித்து பேசுகிறார். அப்பொழுது அவர் கண்ணன் பேங்கில் என் நண்பரின் மனைவியை மாட்டி விட்டான் அதனால் தான் பழிவாங்க இப்படி செய்ய சொன்னதாக சொல்லி சிரிக்கிறார்.

கஸ்தூரி எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணமா என நினைக்கிறார் என்ன செய்தாலும் அந்த குடும்பத்தை பிரிக்க முடியாது என சொல்ல உடனே ஜகார்த்தனன் எப்படியாவது மீனாவை வரவைப்பேன் என சொல்கிறார் உடனே மல்லி அப்படியே முல்லை வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என சொல்லுகிறார் பிறகு அந்த மூர்த்தி தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டும் எனவும் ஜகார்த்தனன் கூறுகிறார். இவ்வாறு ஆசை ஆசையாக கட்டுன இந்த கடையை மூடிவிட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.