விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.நான்கு அண்ணன் தம்பிகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிதாக ஹோட்டல் தொழிலை துவங்கியிருக்கிறார்.மேலும் கதிரின் கடையில் காலையில் டிபன் முழுவதும் காலியானதால் 20 பேருக்கு சமைத்தும் வைத்திருக்கும் மதிய உணவும் தீர்ந்துவிடும் என முல்லை மல்லிகாவிடம் சவால் விடுகிறார்.
மேலும் பிறகு மாலை 4 மணி ஆன பிறகும் ஐந்து பேர் மட்டுமே ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு இருக்கிறார்கள் அதை வைத்துக் கொண்டு மல்லிகா கதிர் முல்லை இருவரையும் கேலி செய்து கொண்டிருக்கிறார். இதனால் கதிர் முல்லை இருவரும் மிகவும் கடுப்பாகிறார்கள்.இதன் காரணமாக யாராவது ஹோட்டலுக்கு சாப்பிட வருவார்களா என மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மறுபுறம் பாண்டியன் ஸ்டோருக்கு ஒரு நபர் வருகிறார் அவர் கதிருக்கு தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த நேரத்தில் தனம் அவரிடம் கதிரின் ஹோட்டல் தொழிலை பற்றி விளக்கம் அளித்து ஏதாவது ஆர்டர் இருந்தால் கொடுங்கள் என சிபாரிசு செய்கிறார். எனவே அவரும் அடுத்து வீட்டில் நிகழும் விசேஷத்திற்கு நிச்சயம் கதிர் ஹோட்டலில் ஆர்டர் கொடுக்கிறேன் என வாக்குறுதி அளிக்கிறார்.
இவ்வாறு அந்த ஆர்டர் மட்டும் கிடைத்தால் நிச்சயம் கதிர் ஹோட்டல் இதன் மூலம் பாப்புலர் ஆகும் மேலும் இதனால் இவர்களுக்கு தொடர்ந்து பல ஆர்டர்கள் கிடைப்பதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே மல்லிகாவின் ஆணவத்தை கதிர் முல்லை அடக்குவார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலேயே பார்லர் ஆரம்பித்து இருப்பதால் அங்கு வரும் ஈஸ்வரியை வைத்து தான் அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொள்கிறார்.
மேலும் அவருக்கு அலங்கரிப்பது முகத்தை அழகு படுத்துவது என மீனாவை வெறுப்பேற்றுகிறார் மீனாவும் ஐஸ்வர்யா பரவாயில்லை என ஒப்புக்கொள்கிறார். மேலும் நாளையிலிருந்து ஐஸ்வர்யா உடைய ஹோட்டல் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது இதன் மூலம் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பெரிதாக நடத்தவும் வாய்ப்பு இருக்கிறது.