விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் தன்னுடைய மனைவிக்காக வாங்கி இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தருவதாக சபதம் போட்டு இருக்கிறார் எனவே எப்படியாவது இந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என படாத பாடு பட்டு வருகிறார்கள்.
இவர்கள் ஆரம்பித்த ஹோட்டலிலும் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் முல்லை எதிர்பாராத விதமாக நியூஸ் பேப்பர் ஒன்றில் தம்பதிகளுக்காக நடக்கும் சமையல் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தார் 10 லட்சம் பரிசு தொகை கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. எனவே கதிர் இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என மறுத்தும் முல்லை கதிரை சமாளித்து அந்த போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.
இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக புரிந்து வைத்திருக்கும் நிலையில் ஒரு சில சுற்றுகளில் வெற்றி பெற்று தற்போது இறுதியில் தேர்வான நான்கு ஜோடிகளில் ஒருவராக மாறி உள்ளனர். மேலும் அங்கு இருக்கும் ஜோடிகளில் இவர்கள் தான் முதல் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சில ஜோடிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நேரத்தில் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வாங்கி இருக்கும் இடத்தின் பத்திரப் பதிவுக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறார் இதனால் போட்டியில் இனி தொடர விருப்பம் இல்லாமல் பாதிலேயே கிளம்பலாம் என முடிவு செய்திருக்கிறார். ஆனால் போட்டிகளை நடத்தி வருபவர்கள் கதிர், முல்லை இருவரையும் போக விடமாட்டார்கள்.
மேலும் இவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 10 லட்சம் கிடைத்துவிடும் எனவும் அதன் மூலம் அவர்கள் வாங்கி ஐந்து லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு குடும்பத்துடன் இணைந்து விடலாம் எனவும் நினைக்கிறார் முல்லை. எனவே கதிரை போக விடாமல் தடுக்கிறார் ஒரு கட்டத்தில் கதிரை சமாதானப்படுத்தி இறுதி சுற்றில் பங்கேற்று 10 லட்ச ரூபாய் பணத்தை வென்று வீட்டு திரும்ப ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.