விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள் ஆனால் சில பிரச்சனைகளினால் கதிர் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
மேலும் முல்லையின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறேன் என கதிர் முல்லை முடிவெடுத்திருந்த நிலையில் இவர்கள் புதிதாக ஹோட்டல் ஆரம்பித்தார்கள் அதில் பெரிதாக லாபத்தை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் உள்ள எதார்த்தமாக நியூஸ் பேப்பரில் 10 லட்சத்திற்கான சமையல் போட்டியை காண விளம்பரத்தை பார்த்து அதில் கலந்து கொள்வதற்காக சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்த போட்டியில் கதிர் கலந்து கொள்ள மறுத்த நிலையில் பிறகு முல்லை இவருக்கு சொல்லி புரிய வைத்தார் எனவே கதிரும் இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டு தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து விடலாம் என்ற கனவுடன் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என நினைத்தார். அதேபோல் இரண்டு சுற்றுகளிலும் முன்னிலை வைத்து வந்த கதிர் கடைசியில் இந்த போட்டியில் வெற்றி பெற்று பத்து லட்சத்தை பெறுகிறார்.
வீட்டிற்கு வந்தவுடன் கதிர் முல்லை இருவரும் இதுதான் அவர்கள் கடைசியாக இந்த வீட்டில் தனியாக வாழும் இரவு என்றும் அடுத்த நாள் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழ போகிறோம் எனவும் கனவு காண்கிறார்கள். பிறகு அடுத்த நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிதாக வாங்கும் மனைவியின் பத்திரப்பதிவு என்பதால் பத்தி ஆபிசில் குடும்பமே கிளம்பி சென்றிருக்கிறது.
அங்கு கதிர் முல்லை இருவரும் சென்று தாங்கள் வென்ற 10 லட்சம் பரிசு தொகையை அண்ணனிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். இவ்வாறு பத்து லட்ச ரூபாய் வென்ற நிலையில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் இதற்கு மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டி ஆடம்பரமாக வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.