ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்திய கதிர்.! உச்சகட்ட கோபத்தில் மூர்த்தி..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கூட்டு குடும்பமாக வாழும் பொழுது எவ்வளவு மகிழ்ச்சி மற்றும் பிரச்சனைகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் மூர்த்தி தனது பூர்வீக வீட்டை விட்டுவிட்டு புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார்.

அதற்கான பத்திரப்பதிவு இன்று நடைபெறுகிறது அந்த புதிய வீட்டை மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய நான்கு அண்ணன் தம்பிகளின் பெயரிலும் பத்திர பதிவு நடக்க உள்ளது ஆனால் தற்பொழுது கதிர்  முல்லை போட்டிக்காக வெளியூர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து தற்போது வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் இதனைப் பற்றி மூர்த்தியிடம் சொல்ல முடியவில்லை எனவே முல்லை தனது அம்மாவிடம் விஷயத்தை சொல்லி மூத்தியிடம் சொல்ல சொல்கிறார் ஆனால் இதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் போய் சொல்லாமல் இருக்கிறார். மேலும் பத்திரப்பதிவு இன்று தான் நடக்க உள்ளது என ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் இந்த நேரத்தில் கதிர் வெளியூர் சென்றுள்ளது மூர்த்திக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

பிறகு பத்திரப்பதிவு செய்யும் நேரம் முடிந்து விட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நிலத்தை விற்கும் உரிமையாளர் அவமானப்படுத்துகிறார். இனிமே நான் எப்ப வருவேனோ அப்பதான் ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்க முடியும் என மிகவும் கரராக பேசிவிட்டேன் சென்று விடுகிறார் எனவே வீட்டிற்கு வந்தவுடன் மூர்த்தி மிகவும் கடுமையாக பேசுகிறார்.

நம்ப சொல்றத எதை தான் கதிர் கேட்டு இருக்கிறான் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என்று எல்லோரும் சொன்னோம் அதையும் அவன் கேட்கல இப்பொழுது வேணும்னே ரிஜிஸ்டர் ஆபீஸ் வராமல் எங்க எல்லாரையும் அவமானப்படுத்தி விட்டான் என மூர்த்தி கோபப்படுகிறார். கதிர் இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மூர்த்தி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.