விஜய் டிவியில் நான்கு அண்ணன், தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்தில் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து மேலும் தற்பொழுது மற்றொரு பிரச்சினை வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு பெரிதும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது அதாவது மூர்த்தி தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய கனவில் இறந்து போன அம்மா லட்சுமி வருகிறார் உடனே மூர்த்தி கதிர் வீட்டை விட்டு வெளியே போய்விட்டான் என்றும் மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போடுவதை பார்த்தால் இவர்களும் என்னை விட்டுப் போய்விடுவார்களோ என பயமாக இருக்கிறது என கூறுகிறார்.
உடனே அதற்கு லட்சுமி இந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு வீட்டிற்கு குடியேறுங்கள் என சொல்கிறார்.பிறகு தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்து வேறு ஒரு வீட்டிற்கு செல்லலாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார். அந்த நேரத்தில் ஜீவா வெளியில் வரும் பொழுது அவருடைய பக்கத்தில் ஓடு ஒன்று உடைந்து விழுகிறது அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் மூர்த்தி வந்தவுடன் மீனா இதனைப் பற்றி கூற மூர்த்தியிடம் கூற அம்மா சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான் என யோசிக்கிறார்.
மேலும் இதற்கு மேல் இருந்தால் குழந்தைகளுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்படும் எனவே வீட்டில் இருப்பவர்களிடம் இதனைப் பற்றி கூற அதற்கு மீனா குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்படுகிறது எனவே நாம் அனைவரும் வேறு ஒரு வீட்டிற்கு சென்றால் நன்றாக இருக்கும் என கருத்து கூறுகின்றனர் இவ்வாறு திடீரென்று வீட்டை காலி செய்தால் அது சரியாக இருக்குமா என மூர்த்தி தனம் இருவரும் யோசித்து வருகிறார்கள்.