முல்லையின் ஐடியாவால் லாபத்தை பெற்ற கதிர்.! பாண்டியன் பெயர் வேண்டாம் என்னுடைய பெயர் தான் வேண்டும் என பியூட்டி பார்லருக்கு பெயர் வைத்து ஐஸ்வர்யா..

pandian-stores
pandian-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் பல முயற்சிகளுக்கு பிறகு புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.மேலும் அதில் நாள்தோறும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்து வந்தார்.மேலும் இந்த நேரத்தில் முல்லையின் அக்கா மல்லிகா கதிரை கேலியும் ,கிண்டலும் செய்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்குள் இந்த ஹோட்டலில் இருந்து லாபம் எடுக்கிறேன் என கதிர் சவால் விட்டிருக்கிறார்.

மேலும் இதற்காக அடுத்தது என்ன செய்யலாம் என கதிர் யோசித்து வருகிறார் மேலும் முல்லை காலையில் டிபனுடன் செய்துவிட்டு உடனே மதிய உணவையும் சமைப்பது சிரமமாக இருக்கிறது.ஆகையால் காலையிலேயே டிபனுடன் மதிய உணவை சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறுகிறார்.

மேலும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பும் லாபமும் வரும் என முல்லை கதிருக்கு ஐடியா சொல்கிறார் இதனையும் அப்படியே செய்யலாம் என கதிரும் அடுத்த நாள் செய்ததால் காலையில் டிபன் சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் கூடவே மதிய உணவையும் வாங்கி செல்கின்றனர்.

இதனால் பாண்டியன் கடைக்கு கொஞ்சம் லாபம் வந்துள்ளது மேலும் ‌இதனால் முல்லையின் அக்காவும் இன்று வாயை மூடிக்கொண்டு உள்ளார் ஒருபுறம் ஐஸ்வர்யா ஆரம்பித்திருக்கும் பியூட்டி பார்லருக்கு பாண்டியன் பியூட்டி பார்லர் என பெயர் வைக்கலாம் என அனைவரும் யோசித்து வருகிறார்கள் அந்த நேரத்தில் அவருக்கு திடீரென்று ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் என பெயர் சூட்டுகிறார்.

இதனைப் பற்றி மீனா கேட்ட பொழுது பியூட்டி பார்லருக்கு பெரும்பாலும் பெண்கள் தான் வருவார்கள் அப்படி இருக்கும் பொழுது ஆண் பெயரான பாண்டியன் பெயரை வைத்தால் நன்றாக இருக்காது எனவே குடும்பத்தினர்களை அம்மணப் படுத்தும் வகையில் ஐஸ்வர்யா பேசுகிறார்.இவ்வாறு மீனா ஐஸ்வர்யாவை குடும்பத்தில் இருப்பவர்களிடம் மாட்டி விடுவது போல் பேசப் போகிறார் மீனா.