விஜய் டிவியில் ட்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது மேலும் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார். தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் பெரிதாக லாபம் கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டத்தை பெற்று வருகிறது.
இருந்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நஷ்டத்தில் அளவும் குறைந்து வருகிறது. இவ்வாறு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை கதிரும் முல்லையும் செய்து வருகிறார்கள் லாபம் கிடைக்காத காரணத்தினால் இவர்களை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மல்லிகா.எனவே கதிர் முல்லை மல்லிகாவின் வாயை அடக்க வேண்டும் என்பதற்காக எப்படியாவது வாடிக்கையாளர்களை கடைக்கு வர வைக்க வேண்டும் என யோசித்து வருகிறார்கள்.
எனவே கதிர் வாடிக்கையாளர்களுக்கு முதல் நாள் இலவசமாக உணவு அளிக்கலாம் என யோசனை சொல்கிறார் அதற்கு முல்லை அன்றைய தினம் மட்டும் எல்லாம் சாப்பாடு தீர்ந்து விடும் அதற்கு நமக்கு பெரிய நஷ்டம் தான் ஏற்படும் என கூறுகிறார். பிறகு முல்லை காலையில் டிபன் மதியம் சாப்பாடு என இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்க மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.
எனவே காலையிலேயே கலவை சாதனங்களை டிபன் சேர்த்து செய்து கொடுக்கலாம் என யோசிக்கிற இப்படி செய்தால் நிச்சயம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும், காலையில் வேலைக்கு செல்பவர்களுக்கும் இதே நல்ல உதவியாக இருக்கும் எனவே நம்மளுக்கும் ரெகுலர் கஸ்டமராக பல வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிடைக்கும் இதனால் ஹோட்டலில் லாபம் வர வாய்ப்பு இருக்கிறது என முல்லை கதிரிடம் யோசனை சொல்கிறார்.
எனவே கதறும் உன்னுடைய யோசனை சரிதான் என காலையில் டிபன் உடன் கலவை சாதத்தையும் சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்கிறார். இதனால் இவர்களுடைய ஹோட்டலில் லாபம் வர இதனை பார்த்து மல்லிகா அதிர்ச்சியடைகிறார்.