விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் முழுவதும் அப்பத்தாவின் கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன அவர் டாக்டரையே பொய் சொல்ல வைத்து விட்டார்.
மகன்களின் தொல்லை இல்லாமல் மூன்று நாள் ஹாஸ்பிடலில் இருக்க பிளான் போட்ட அப்பத்தா மருமகளோடு இப்போது என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மற்றவர்களுக்கு இந்த விவரம் தெரியாததால் கோமதி ராஜி இருவரும் இன்னும் வருத்தத்தில்தான் இருக்கின்றனர்.
மேலும் கோமதி தன் கையாலேயே அம்மாவுக்கு சமைத்து பழனியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் திடீரென பாண்டியன் வீட்டிற்கு வந்து கேரியரில் சுடச்சுட தயாராக இருக்கும் சாப்பாட்டை பார்த்து விடுகிறார்.
இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் என்ன செய்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் தங்கமயில் சரவணன், பாண்டியன் இருவரிடமும் பேச முயற்சிக்கிறார். ஆனால் அவர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.
அதனால் மீனா இனிமேல் யாரிடமும் போய் கெஞ்சாதீர்கள் என அட்வைஸ் கொடுத்து அவரை சமாதானப்படுத்துகிறார். அதே போல் தங்கமயில் தான் மாறிவிட்டதாக மாமியாரிடமும் கூறுகிறார். இப்படியாக இன்றைய எபிசோட் சுவாரசியமாக நகர இருக்கிறது.
இதில் தங்கமயில் மனமாற்றம் உண்மை தானா அல்லது மீண்டும் அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுவாரா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போது ஓரகத்திகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது.