விரைவில் முடியும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

pandiyan-stores-1
pandiyan-stores-1

தமிழ் சின்னத்திரைகள் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சுவாரஸ்யமான கதை அம்சத்துடன் பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தற்பொழுது ஒட்டு மொத்த குடும்பமும் பிரிந்து சின்னாபின்னமாகி உள்ளது. ஆம், அதாவது ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இவரை அடுத்து கண்ணனும் வீட்டை விட்டு போய் உள்ளார்.

மேலும் மீனாவின் அப்பா ஜகார்த்தனன் ஜீவாவை இதற்கு மேல் அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக பல சூழ்ச்சிகளை செய்து தன்னுடைய மருமகன் ஜீவாவிற்கு மூர்த்தி தனத்தின் மீது கோபம் வருவது போல் பேசி வருகிறார். இந்நிலையில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்ட நிலையில் மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் தன்னுடைய மனைவிகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு வீட்டை விட்டு பிரிந்து சென்ற அண்ணன் தம்பிகள் மீண்டும் ஒன்று சேரும்பொழுது இந்த சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் இந்த சீரியல் நிறைவடைந்து புதிய சீரியல் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.