வலி தாங்க முடியாமல் கதறும் தனம்.! ப்ரஸ்ட் கேன்சர் இருப்பதை தெரிந்துக் கொண்டு சுக்குநூறாக உடைந்த குடும்பம்..

pandiyan stores
pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜ் இருந்துவரும் நிலையில் அனைவரையும் விட்டுவிட்டு நாம் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்து வருகிறார்.

தற்பொழுது உடனடியாக டாக்டர் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் மேலும் ஆரம்பிப்பதற்கு முன் குழந்தையை ஆபரேஷன் மூலம் எடுத்து விட வேண்டும் என சொல்லி இருக்கும் நிலையில் இந்த ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு தான் தனம் உயிருடன் இருப்பாரா இருக்க மாட்டாரா என தெரியவரும்.

எனவே தனக்கு ஒரு வாரம் டைம் தருமாறு மீனாவிடம் கேட்டிருக்கும் நிலையில் இதனை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என சத்தியமும் வாங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தான் இறப்பதற்குள் தனது கடமைகளை செய்து விட வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யா கண்ணனின் வளையகாப்பு நிகழ்ச்சியை மிகவும் பிரமாண்டமாக நடத்துகிறார்.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் தனம் வலி தாங்க முடியாமல் துடிக்க அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இதன் பிறகு தான் மூர்த்தி, ஜீவா என அனைவருக்கும் உண்மை தெரிய வருகிறது.

எனவே மூர்த்தி தனத்தின் அண்ணியிடம் அவ யாருக்கும் துரோகம் நினைச்சதே கிடையாது அவளுக்கு போய் இப்படி ஒரு நிலமையா என கூறி அழுகிறார். பிறகு மீனா ஜீவாவிடம் கூறி அழுக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சுக்கு நூறாக உடைந்துள்ளது. இவ்வாறு இந்த நோயிலிருந்து தனம் குணமாகி மீண்டும் பிழைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.