குடும்பத்திற்காக பிரஸ்ட் கேன்சரை மறைக்கும் தனம்.! பரபரப்பாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு ஏற்பட இருக்கும் நிலையில் இதனை தனம், மீனா இருவரும் மறைக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் நெஞ்சுவளியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இதனை வீட்டில் சில முறை சொல்லி இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் தற்பொழுது அது தனத்தின் உயிருக்கு ஆப்பு வைத்துள்ளது. அதாவது நெஞ்சு வலி நிக்காத காரணத்தினால் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பிரஸ் கேன்சர் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூற இதனால் அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு தனம் நிற்பதை பார்த்துக் கொண்ட மீனா இங்கு எங்கக்கா வந்தீங்க எனக் கேட்க தனம் அதை இதையும் சொல்லியும் கிளம்பி விடுகிறார். எனவே தனத்தை நம்பாத மீனா டாக்டரை பார்த்து என்ன ஆச்சு அக்காவுக்கு எனக் கேட்க அவர் அனைத்து உண்மைகளையும் சொல்கிறார்.

எனவே வீட்டிற்கு வந்து தனத்தை அழைத்துக் கொண்டு டெஸ்ட் எடுப்பதற்காக மீனா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு டெஸ்ட் எடுத்த பிறகு நாளைக்கு வந்தால் ரிசல்ட் கிடைக்கும் என கூறியிருக்கும் நிலையில் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என தனம் பயப்படுகிறார். அதேபோல் மீனாவும் அக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து விட இவர்கள் கூறும் பதில் கூறத் தெரியாமல் உளறியதால் இவர்கள் இருவரும் பண்றது ஏதோ சரி இல்லை என ஐஸ்வர்யா, முல்லை மற்றும் மூர்த்தி நினைக்கிறார்கள். பிறகு மூர்த்தியும் உனக்கு நெஞ்சு வலி என்று சொன்னியே சரியாயிடுச்சு இல்ல எந்த பிரச்சினையும் இல்லை என கேட்க தனம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை மாமா என கூறிவிடுகின்றார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் தனம் மீனா இருவரும் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார்களா அப்பொழுது அவர் பிரஸ் கேன்சர் செகண்ட் ஸ்டேஜ் எனக் கூற மீனா அதிர்ச்சி அடைய தனம் கதறி அழுகிறார். அப்பொழுது மீனா ஆறுதல் கூறுவதற்காக வர தனம் எனக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா மாமாவால எப்படி தாங்கிக்க முடியும் இதை வீட்டில் நான் எப்படி சொல்றது கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிடலாம் என மீனா சொல்ல ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார்.