ஹோட்டலில் தன்னுடைய வித்தையை காட்டி கஸ்டமர்களை அதிகப்படுத்தும் கதிர்.!

pandian-stores
pandian-stores

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஐஸ்வர்யா புதிதாக பியூட்டி பார்லர் ஒன்றை திறந்து உள்ளார் மேலும் அதன் திறப்பு விழாவுக்கு எல்லோருக்கும் மேக்கப் போட்டு ஒரு வசூல் செய்கிறார்.

மறுபுறம் கதிரின் ஹோட்டல் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது ஒரு நாளைக்கு பத்து பேர் தான் வருகிறார்கள் இதில் மூன்று பேர் கடன் எனக் கூறி விடுகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் கடையில் லாபம் இல்லை என்றாலும் தொடர்ந்து தினமும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள் நஷ்டம் குறைய கதிர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் எப்படியாவது ஹோட்டலை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக முல்லை பலவற்றையும் செய்து வருகிறார். மேலும் ஒருபுறம் தனம் தன்னுடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருபவர்களிடம் இது போன்ற விஷயத்தை சொல்லி ஆர்டர் பண்ணுங்கள் என சிபாரிசு செய்து வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் கதிர் ஹோட்டலில் கரண்டியை ஸ்டைலாக பிடிப்பது, பரோட்டாவை தூக்கிப் போடுவது என பல வித்தைகளை செய்து வருகிறார்.

இதனை பார்த்த முல்லை ஆச்சரியப்பட்டு வருகிறார் மேலும் பரோட்டா உருட்டிய பிறகு தூக்கி போட முல்லை அதனை பிடிக்கிறார் இது என்ன விளையாடுற இடமா என முல்லையின் அம்மா திட்டுகிறார்.இப்படிப்பட்ட நிலையில் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வரும் நபர் ஒருவர் கதிர் ஸ்டைலாக பரோட்டாவை தூக்கி போடும் வீடியோவை எடுக்கிறார் இதன் மூலம் வீடியோ வைரலாகி ஹோட்டலுக்கு நிறைய பேர் வர வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு முல்லை கதிர் எப்படியாவது மல்லிகாவிடம் போட்ட சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்கள் இதுவரையிலும் எந்த முயற்சியும் வொர்க் அவுட் ஆகாமல் இருந்து வரும் நிலையில் விரைவில் இவர்கள் நல்ல நிலைமைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.