ஆத்திரத்தில் முல்லையின் அம்மாவை வெளுத்து வாங்கிய கதிர்.! மகிழ்ச்சியில் தனம்..

pantiyan-stores-kathir
pantiyan-stores-kathir

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது தன்னுடைய பூர்வீக வீட்டை மூர்த்தி விற்று உள்ள நிலையில் அந்த வீட்டை மீனாவின் பெயரில் எழுதப்பட்டுள்ளது மேலும் ஜெகநாதன் என்னுடைய ஒரே மகள் மீனா தான் அவளுக்காக இதை நான் செய்கிறேன் எனக் கூறி விடுகிறார். இதனை முல்லை தன்னுடைய அம்மா அப்பாவிடம் கூற  ஆத்திரமடைந்து முல்லையின் அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு சென்று மூர்த்தி, தனம், ஜீவா, கண்ணன் என அனைவரும் இருக்கும் பொழுது கதிரின் பங்கை தரவேண்டும் என மிகவும் கேவலமாக திட்ட அனைவரும் கதிர் தான் தன்னுடைய பங்கை இப்படி கேட்க சொல்லி இருப்பாரோ என யோசிக்கிறார்கள் பிறகு ஆத்திரமடைந்த மூர்த்தி பங்கு வேண்டும் என்றால் கதிரை வந்து கேட்க சொல்லுங்கள் என கூறி விடுகிறார்.

பிறகு கண்ணன் கதிரின் ஹோட்டலுக்கு சென்று அங்கு நடந்த அனைத்தையும் கூற கதிர் மிகவும் கோபப்படுகிறார். உடனே அந்த ஹோட்டலுக்கு முல்லையின் அம்மா வருகிறார். அப்பொழுது கதிர் யாரைக் கேட்டு அங்க போய் பங்கு கேட்டீங்க நான் உங்களை கேட்க சொன்னேனா இதற்கு மேல் ஏதாவது போய் கேட்டீங்கன்னா மானம் கெட்டுடும்.

என்னுடைய அண்ணன் எங்களை கஷ்டப்பட்டு வளத்தாங்க கடனை அடைத்து விட்டு மீண்டும் நான் அந்த வீட்டுக்கு தான் போகப் போகிறேன் எனக் கூறி கண்டபடி திட்டுகிறார் பிறகு முல்லையின் அம்மா மரியாதை இல்லாத இடத்தில் இதற்கு மேல் இருக்கக் கூடாது என கிளம்பு விடுகிறார்.

இதனைக் கேட்ட கண்ணன் தன்னுடைய வீட்டிற்கு சென்று ஹோட்டலில் நடந்த அனைத்தையும் கூற அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் பிறகு தனமும் கதிர் சீக்கிரம் கடனை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டும் என நினைக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.