ரிஜிஸ்டர் ஆபீஸில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்த மீனா.! சமாளிக்கும் ஜகார்த்தனன்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மூர்த்தியின் கனவில் அவருடைய அம்மா பூர்வீக வீட்டை விட்டுவிட்டு புது வீடு கட்ட வேண்டும் என கூறிய நிலையில் மூர்த்தி வீடை விற்பதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார் மேலும் இதனை அறிந்து கொண்ட மீனாவின் அப்பா ஜகார்த்தனன் இந்த வீட்டை தான் வாங்கிக் கொள்வதாக கூறிவந்த நிலையில் மூர்த்தி வேண்டாம் என தவிர்த்து வந்தார்.

ஆனால் மீனா அதை இதை பேசி மனதை மாற்றி விட்டார் இப்படிப்பட்ட நிலையில் பூர்வீக வீட்டை ஜெகார்த்தனுக்கு எழுதிக் கொடுக்க நினைத்த நிலையில் தற்போது பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்று அனைவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்லும் நிலையில் அங்கு ஜகார்த்தனன் அந்த வீட்டை தனது மகன் மீனாவின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனைக் கேட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரே பொண்ணு அவளுக்கு தானே செய்யப் போகிறேன் என அனைவரையும் சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு கடைசி வரை இந்த வீடு என்னுடைய அப்பாவுக்கு தான் எனக்கூறி வந்த மீனா தற்பொழுது தன்னுடைய ஆதாக்கி கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் ஜகார்த்தனன் ஜீவாவிடம் எனது மகள் பிறந்த பிறகுதான் நான் முன்னுக்கு வந்தேன் இதனால் இந்த சொத்தை என் மகள் பெயரில் எழுத ஆசைப்படுகிறேன் எனக் கூறுகிறார். மேலும் இன்னைக்கு எல்லாரும் எங்க வீட்ல தான் சாப்பிடணும் என கூறுகிறார் ஆனால் முல்லை கதிர் கடையில் வேலை இருப்பதாக கூறிவிட்டு செல்கிறார்கள்.

பிறகு மூர்த்தியும் நான் வரவில்லை எனக் கூற பிறகு சமாதானப்படுத்தி ஜகார்த்தனன் வீட்டிற்கு மூர்த்தி செல்கிறார் இவ்வாறு மீனாவின் அம்மா அனைவருக்கும் தடபுடலாக அனைத்து வகையான உணவுகளையும் சமைத்து விருந்து வைக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு மீனாவின் பெயரில் பதிவாகியுள்ளது.