விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தொடர்ந்து ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வரும் நிலையில் வீட்டை மாற்ற வேண்டும் என மூர்த்தியின் கனவில் அவருடைய அம்மா வந்து சொன்னதால் எப்படியாவது பூர்வீக வீட்டை விற்க வேண்டும் என மூர்த்தி பல முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் இந்த வீட்டை மீனாவின் அப்பா ஜெகார்த்தனன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.
இதனைப் பற்றி மூர்த்தியிடம் கூற சொந்த பந்தத்தில் வீட்டை விற்க விருப்பம் இல்லாதது போல் பேசி வருகிறார் ஆனால் மீனா தொடர்ந்து மூர்த்தியின் மனதை மாற்ற வேண்டும். என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது மூர்த்தியும் ஜகார்த்தனனுக்கு வீட்டை கொடுக்க முடிவெடுத்துள்ளார் இந்த முடிவினால் இவர்களுக்கிடையே சலனம் ஏற்படுகிறது.
மேலும் இது சுத்தமாக முல்லையின் அம்மாவிற்கு பிடிக்கவில்லை மேலும் மூர்த்தி மீனாவின் பேச்சைக் கேட்டு ஜீவாவிற்கு இந்த வீட்டை எழுதிக் கொடுக்கப் போகிறார் என முல்லையின் அம்மா கத்தி வருகிறார். இதன் காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களை சந்தித்து கண்டபடி சண்டை போட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இதனை தெரிந்து கொண்ட கதிர் முல்லையின் அம்மாவை கண்டித்து வீட்டை விற்ற பணத்தை வைத்து இடம் வாங்கி அதில் புதிதாக நான்கு அண்ணன் தம்பிகள் பெயரில் வீடு கட்ட தான் போகிறார்கள்.
இதனால் அவர்களைப் பற்றி குறை கூறி பெரிதாக பிரச்சனையை உண்டாக்க வேண்டாம் என திட்டுகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீனாவின் அப்பாவிற்கு வீட்டை எழுதி கொடுப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் பத்திரப்பதிவு செய்யும் அளவுலகத்திற்கு செல்கிறார்கள். கதிரும் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக செல்கிறார்.
இதனை பார்த்தவுடன் முல்லையின் அம்மா மிகவும் கோபப்படுகிறார் அண்ணன் கூப்பிட்ட உடனே கையெழுத்து போட்டுக் கொடுக்க கிளம்புகிறீர்கள் அதில் உங்களது பங்கை கையோடு வாங்கிட்டு வாங்க என்று கதிரிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். இவ்வாறு முல்லையின் அம்மா கோபத்தில் பேச எப்படியோ அனைவர் மனதையும் மாற்றி மீனா தன்னுடைய அப்பாவிற்கு அந்த வீட்டை விரிக்க வைத்து விட்டார்.