கதிரை கழட்டி விட்ட குடும்பம்.. தூண்டிவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருக்கு எதிராக மாற்றும் முல்லையின் அக்கா.!

padiyan-stores
padiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்த ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் மூர்த்தியின் கனவில் அவருடைய அம்மா வந்து பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீட்டை கட்ட வேண்டும் என கூறியதால் அனைவரும் வீடு கட்டும் எண்ணத்திற்கு வந்துள்ளார்கள்.

இதனால் அனைவரும் புதிதாக மனை வாங்குவதற்காக முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு கதிரும் வந்து ஓகே சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஜீவா கதிரை அந்த மனைக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் இவர்கள் அண்ணன் தம்பிகளாக பாசமாக இருக்கும் அழகான தருனத்தை காட்டியுள்ளார்கள். இதனை தெரிந்துக்‌கொண்ட முல்லையின் அம்மா மற்றும் முல்லையின் அக்கா இருவரும் மூர்த்தியின் குடும்பத்தினர்களிடம் யாரைக் கேட்டு விற்கிறீர்கள்.

அனைவரிடமும் விலை கேட்டு விசாரித்து எங்களுடைய ஆலோசனையின் பெயரில் வீட்டை விற்க வேண்டும் என பிரச்சனை செய்கிறார்கள் இதனை தெரிந்து கொண்ட முல்லை தன்னுடைய அம்மாவையும், அக்காவையும் சரமாரியாக கேள்வி கேட்கிறார். அதாவது எங்களுக்கு தெரியாமல் வீட்டை விற்கிறார்கள் என்று நான் வந்து மூளையில் உட்கார்ந்து அழுது புலம்பினேனா.

எதற்கு உங்களுக்கு தேவையில்லாததை எல்லாம் பேசுறீங்க என கண்டபடி முல்லை திட்டுகிறார். அதற்கு முல்லையின் அம்மா அண்ணன் தம்பி சேர்ந்து எடுக்கும் முடிவில் கதிரை மட்டும் கழட்டி விட்டு விட்டார்கள் என்று நல்ல எண்ணத்தில் தான் நான் அவ்வாறு செய்தேன் என கூற மல்லிகா எதுவும் கூறாமல் இருந்து வருகிறார்.

இவ்வாறு தன்னுடைய அம்மாவை தூண்டிவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் சண்டை போட வைக்கிறார் மல்லிகா. இவ்வாறு நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் மனதார யாரும் பிரியவில்லை எப்படியாவது இவர்களை பிரித்து விட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் மல்லிகா.