விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய பூர்வீக வீட்டை விட்டுவிட்டு புதிய வீடு கட்ட இருக்கிறார்கள்.
அதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய இடத்தினை மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய நான்கு பேரிலுயும் எழுதி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த நேரத்தில் முல்லை தன்னுடைய பிடிவாதத்தினால் கதிரை சமையல் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு கதிர், முல்லை இருவரும் தொடர்ந்து சில போட்டிகளில் ஜெயித்து வரும் நிலையில் அங்கு இருக்கும் சக போட்டியாளர் சிலருக்கு இது பிடிக்கவில்லை.
எனவே அவர்கள் தொடர்ந்து இவர்களிடம் சண்டை போட்டு வரும் நிலையில் ஒரு கட்டத்தில் கதிர் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மூர்த்தி, ஜீவா இருவரும் முல்லைக்கு போன் செய்து பேச அப்பொழுது இங்க நடக்க இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் கூறுகிறார்.
உடனே இவர்கள் இருவரும் கதிர் முல்லை இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் கதிரை கத்தியால் குத்த போகும் நேரத்தில் சரியாக மூர்த்தி, ஜீவா வந்து அவர்களை அடித்து உதைக்கிறார்கள் உடனே அவர்கள் இந்த முறை தப்பித்து விட்ட இனிமேல் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் ஓடிவிடு இல்லையென்றால் கண்டிப்பாக அடுத்த முறை உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என்ன மிரட்டுகிறார்கள்.
அதற்கு மூர்த்தி அவன் இங்கதான் இருப்பான் இந்த போட்டியில் ஜெயிச்சு விட்டு தான் போவோம் அவனுக்கு துணையாக நாங்கள் இருப்போம் என கூறுகிறார்கள். இந்த நேரத்தில் தனம் ஜீவாவிடம் போன் செய்து நடந்த பிரச்சனைகளை கூறுகிறார். இவ்வாறு கண்டிப்பாக இந்த போட்டியில் கதிர், முல்லை இருவரும் வெற்றி பெற்று 10 லட்சம் ரூபாய் எடுத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.