விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு துரத்தி விட்ட நிலையில் தற்பொழுது முல்லை கதிர் வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இன்று புதிய இடத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக பத்திர அலுவலகத்திற்கு மூர்த்தி, கண்ணன், கதிர், ஜீவா நான்கு பேரும் செல்கிறார்கள். நான் வந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என சொல்கிறார் கதிர் பிறகு கண்ணன் எல்லாம் நல்லதாக தான் முடிந்து இருக்கிறது என்ன சொல்கிறார்.
இந்த இடத்தை விற்றவர் வந்துவிட்டால் போதும் மீதி அனைத்தும் தயாராக இருப்பதாக மூர்த்தி கூறுகிறார். பிறகு நான்கு பேரும் கையெழுத்து போட இடம் இவர்களின் பெயருக்கு மாற்றப்படுகிறது இதனால் நான்கு பேரும் சந்தோஷப்படுகின்றனர். இந்த நிலையில் இடத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக காரில் அனைவரும் குடும்பத்துடன் செல்கின்றனர்.
தனத்திடம் மூர்த்தி பத்திரத்தை கொடுக்க சொந்த இடத்தினை பார்த்து சந்தோஷப்படுகின்றனர் மேலும் வீடு எப்படி எல்லாம் கட்ட வேண்டும் என ஒவ்வொருவராக தங்களுடைய ஆசையை கூறுகிறார்கள் அப்பொழுது பக்காவாக மீனாவின் அப்பா வருகிறார் அவர் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபப்படுகிறார்.
இதனை பார்த்துவிட்டு என்ன செய்தாலும் இவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் எப்படியாவது இவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என மனதிற்குள் நினைக்கிறார் மறுபக்கம் வீட்டில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது மீனா மீனா என்று கூப்பிடும் சத்தம் கேட்கிறது. மீனா அப்பா குரல் போல் இருப்பதாக கூற உடனே குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று பார்க்கின்றனர்.
அங்கு மீனாவின் அப்பா கோபமாக பிரச்சனை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது வீட்டை காலி செய்ய சொன்னான் பொருள்களை யார் எடுப்பா நான் அதை பாதுகாக்க முடியாது என சொல்கிறார். இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வெளியே தூக்கி போட அப்பொழுது மூர்த்தியின் அம்மா, அப்பா புகைப்படம் கீழே விழுகிறது அதனை தனம் எடுக்க கையில் காயம் ஏற்படுகிறது உடனே மீனாவின் அப்பாவை பார்த்து கதிர், மூர்த்தி முறைக்கின்றனர்.