பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு துரத்திய மீனாவின் அப்பா.! அடைக்கலம் கொடுத்த கதிர்..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதுவும் முக்கியமாக தற்பொழுதுள்ள இளசுகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் தன்னுடைய மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைத்து விட்டு தான் இனி இதற்கு மேல் இந்த வீட்டிற்குள் வருவேன் என தன்னுடைய குடும்பத்தினை பிரிந்து வாடகை வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் கதிர் கடனை அடைப்பதற்காக பல முயற்சிகள் செய்தும் எதுவும் கை கொடுக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் முல்லை நியூஸ் பேப்பர் மூலம் சமையல் போட்டி ஒன்றுக்கு தங்களுடைய பெயரை கொடுத்திருந்தார். எதிர்பாராத விதமாக முல்லை கதிர் அதில் தேர்வாகிய நிலையில் அந்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள் எனவே இதற்காக இவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இவர்கள் தங்களுடைய அண்ணனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு செல்ல அப்பொழுது ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் மீனாவின் அப்பாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறுகிறார்கள். ஜகார்த்தனன் தன்னுடைய மனைவியுடன் வர அப்பொழுது கதிர் ஜெய்த்து வந்த பணத்தை காமித்து எங்கள் அண்ணன் பணம் கொடுத்துவிட்டு தான் வீட்டிற்குள் வந்திருக்கிறார் என கூற அதற்கு பிறகு சண்டை ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஜனார்த்தனனை வெளியே போக சொல்ல அவர் இது என்னுடைய வீடு நான் இங்கே தான் இருப்பேன் நீங்க எப்ப வீட்டை விட்டு போறேன்னு சொல்லுங்க எனக்கூறி மூர்த்தியை அவமானப்படுத்துகிறார்.

இந்த நேரத்தில் தனம் மயங்க நல்லா டிராமா போடுறீங்க என கூறுகிறார் ஜகார்த்தனன். இதனால் மூர்த்தி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நிமிஷமே கிளம்புங்கள் என கூற அனைவரும் கிளம்பி கதிர் முல்லை இருந்த வாடகை வீட்டிற்கு செல்கிறார்கள் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.