கடவுள் போல் உதவி செய்த ஜனார்த்தனன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜீவா.! நீங்க அவ்வளவு நல்லவர் கிடையாதே பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-99
pandiyan-stores-99

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் எப்படியாவது கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என ஜீவா, மூர்த்தி இருவரும் போராடிய வருகின்றனர். அதற்காக ஆபீசர்கள் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கேட்டிருக்கும் நிலையில் பணத்தை ரெடி செய்வதற்காக பலரிடமும் உதவி கேட்க அவர்களால் பலரும் கொஞ்ச பணத்தை மட்டுமே தந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி பலரிடமும் பண உதவி கேட்டு வரும் நிலையில் ஒரு லட்சம் மட்டுமே அவரால் சேர்க்க முடிகிறது எனவே தொடர்ந்து முல்லை அழுது கொண்டிருப்பதை பார்த்த தனம் மூர்த்திக்கு போன் செய்து வீட்டிற்கு உடனே வருமாறு கூறுகிறார் பிறகு தனது நகைகள் வீட்டில் தான் இருக்கிறது அதனை அடகு வைத்து கதிரை வெளியில் எடுங்கள் என சொன்னவுடன் மூர்த்தி வேண்டாம் என கூறுகிறார்.

முல்லையும் தன்னுடைய நகையை எடுத்து அடகு வைத்துக் கொள்ளுங்கள் என கூற அதற்கு தனம் வேண்டாம் குழந்தை பிறந்த பிறகு பெயர் சூட்டும் விழாவில் நீ நகை போட்டு இருக்க வேண்டும் என கூற அதற்கு மூர்த்தியும் நீயும் தான் நகை போட்டு இருக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் தனம் நகையை அடகு வைத்துக் கொள்ளுங்கள் என பிடிவாதமாக கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒருவர் போன் செய்து பணம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்கிறார்.

மூர்த்தி பணம் சரியாக கிடைக்கவில்லை என்றால் நகையை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு செல்ல அதேபோன்று ஜீவாவும் பணத்திற்காக அலைந்து கொண்டிருக்க அவருடைய நண்பர் மூலம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் பணத்தையும் கேட்டுள்ளார். அவரும் தருவதாக சொன்ன உடன் ஜீவா கிளம்ப இந்த நேரத்தில் ஜகார்த்தனன் வீட்டிற்கு வருகிறார் நடந்த அனைத்து விஷயங்களையும் மீனாவின் அம்மா கூறுகிறார்.

மீனா, ஜீவா இருவரும் வெளியில் வர ஏன் நடந்த விஷயங்களை என்னிடம் கூறவில்லை என சொல்ல நீங்க வெளியில் போயிருந்தீங்க அதனாலதான் சொல்லவில்லை. நான் பக்கத்துல தான் போயிருந்தேன் சொல்லி இருக்கலாமே எனக் கூறுகிறார் பிறகு தனது மனைவியை எடுத்து வருமாறு சொல்ல 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துட்டு வருகிறார்.

ஜீவா வேண்டாம் என கூற அதற்கு ஜகார்த்தனன் இது என்னுடைய சொத்து கிடையாது நம்மளுடைய சொத்து நீங்க நாலு மாசமா கடை, வயல் என அனைத்தையும் பார்த்துகிட்டு இருக்கீங்க அதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் எடுத்துக்கல ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம் என்றால் கூட நாலு லட்சம் வந்துடுச்சு எனவே இந்த பணத்தை வாங்கிட்டு போயி கதிரை அழைச்சுக்கிட்டு வாங்க.

நான் உங்க குடும்பத்தை அசிங்கப்படுத்தி இருக்கலாம் ஆனால் சொந்தம் என்றால் சண்டை வருவது சகஜம் தான் மேலும் நிறமாசா கற்பனையா இருக்குற அந்த பொண்ணு கஷ்டப்படக்கூடாது அது நல்லது கிடையாது எனவே மாப்பிள்ளையை போய் அழைச்சுக்கிட்டு வாங்க என கூறுகிறார்.

தொடர்ந்த ஜீவா, மீனா வேண்டாம் என கூறிய பிறகும் ஜகார்த்தனன் பணத்தைக் கொடுத்து உதவி செய்த நிலையில் கண்கலங்கிய ஜீவா தனது மாமாவின் கையைப் பிடித்து ரொம்ப தேங்க்ஸ் என கூறுகிறார் இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மீனாவுக்கு பெருமையாக இருக்கிறது. இதனை அடுத்து மீனாவின் அம்மா உங்க அப்பா எப்படிப்பட்டவர் என்று பார்த்தீர்களா ஆனா நீயும் மாப்பிள்ளையும் தான் எப்ப பார்த்தாலும் அவரை சண்டை போட்டுக்கிட்டே இருப்பீங்க இனிமேலாவது புரிஞ்சுக்கங்க என கூறுகிறார்.

மறுபுறம் கதிர் ஜெயிலில் இருப்பதை பார்த்து வருத்தப்படும் கண்ணன் போலீசார் போனவுடன் என்னை மன்னித்துவிடு எனக் கூறி அழுகிறார். பிறகு சாப்பாடு ஏதாச்சும் வேண்டுமா என கேட்க அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் என சொல்கிறார் உடனே போலீசார் வந்துவிட கண்ணனை விரட்டுகின்றனர். பிறகு அது எங்க அண்ணன் பசிக்கும் அவருக்கு சாப்பாடு வாங்கி தரலாமா என கேட்க அப்ப  எங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வா நாங்க நாலு பேரு இருக்கோம் நாலு மட்டன் பிரியாணி, நாலு சிக்கன் 65, கலக்கி என எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு வா என கூற பிறகு கண்ணன் தனது சட்டை பையில் கையை வைத்து பார்க்க 500 ரூபாய் இருக்கிறது. எனவே வாங்கிக்கொண்டு வருவதாக கூறி செல்கிறார் மேலும் கண்ணனை அசிங்கப்படுத்தியதால் போலீசார் மீது கதிருக்கு மிகவும் கோபம் வருகிறது இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.