விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படியாவது கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டு வர வேண்டும் என ஜீவா, மூர்த்தி பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஜீவா, மூர்த்தி இருவரும் பேங்க் ஆபிஸர்களிடம் பேசி கேசை வாபஸ் வாங்கலாம் என்பதற்காக செல்கிறார்கள்.
அங்க மூர்த்தி மிகவும் கவலைப்படுவதை பார்த்த ஜீவா நீங்கள் எதற்கும் கவலைப்படாதீங்க அண்ணா எதா இருந்தாலும் சரி பண்ணிக்கலாம் கதிரையும் வெளியில் எடுத்துவிட்டு கண்ணனின் பேங்க் பிரச்சனையையும் சரி செய்து விடலாம் எனக் கூற அதற்கு மூர்த்தி இந்த கண்ணன் எப்படியாவது போயிட்டு போறான் ஆனால் கதிரை மட்டும் எப்படியாவது வெளியில் எடுத்து விட வேண்டும்.
கண்ணனால் தான் கதிருக்கு இப்படி ஒரு நிலைமை நல்லா சம்பாதிக்கிறான் இருக்கிற பணத்தை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே தேவையில்லாத கடனை வாங்கி கண்டவன் எல்லாம் அடி வாங்கிகிட்டு இருக்கான் இப்படிப்பட்ட நிலையில் கதிரையும் அந்த பிரச்சனையில் இழுத்து விட்டு இருக்கான் எனக் கூறி புலம்பி வருகிறார்.
மறுபுறம் முல்லை கதிரை நினைத்து கவலைப்பட்டு வரும் நிலையில் உடனே அவரை பார்க்க வேண்டும் என அவங்க இருக்கிற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க என சொல்கிறார் அதற்கு முல்லையின் அம்மா இந்த வைத்த தூக்கிக்கிட்டு அங்க போகணுமா என கேட்க ஒரு கட்டத்தில் முல்லைப் போயே ஆக வேண்டும் என எழுந்திருச்சி தனத்தின் கையைப் பிடித்து அழைத்து செல்கிறார்.
பிறகு அனைவரும் சமாதானப்படுத்தியும் முல்லை சொல்வதைக் கேட்காமல் இருந்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் நீங்க வரிங்களா இல்ல நான் போகட்டுமா எனக்கூறி கிளம்புகிறார். உன்ன பத்தி கவலைப்படாம குடும்பம் தான் முக்கியம்னு சண்டை போட்டுட்டு போய் ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்காருல அவருக்கு தான் இந்த புள்ள மேல அக்கறை இல்லனா உனக்கும் இல்லையா என முல்லையின் அம்மா கேட்கிறார்.
இருந்தாலும் முல்லை கேட்காத காரணத்தினால் பிறகு அழைத்து செல்கின்றனர். இதனை அடுத்து போலீஸ் ஸ்டேஷன் இருக்கு சென்ற முல்லை இது எல்லாம் நமக்கு தேவையா மத்தவங்களுக்கு உதவி பண்ண போய் தானே இப்படி எல்லாம் நடக்குது எனக் கூறி அழ அதற்கு கதிர் அழாத என சொல்லியும் கேட்காமல் திரும்பி திரும்பி அழைக்கிறார்.
எனக்கு உள்ள இருக்குறத நெனச்சு கூட பயமில்லை ஆனா நீ இப்படி அழுகிறதா பார்த்தா தான் பயமா இருக்கு எப்படிங்க அழாம இருக்க முடியும் கோர்ட்டு கேஸ் போனா அவ்வளவுதானா எனக் கூற அதற்கு மீனா அப்படியெல்லாம் ஏதும் நடக்காது ஜீவாவும் மாமாவும் அதுக்காக தான் அலசிக்கிட்டு இருக்காங்க எப்படியா இருந்தாலும் உங்களை வெளியில் எடுத்துடுவாங்க என கூறுகிறார் அதற்கு கதிர் சரி என தலையாட்டுகிறார்.
பிறகு மீனா முல்லைக்கு தைரியம் சொல்லி அனுப்பு எனக் கூறிவிட்டு கிளம்ப பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் எவ்வளவு நேரம் தான் இருப்பீங்க என போலீசார் கத்துகிறார் பிறகு கதிர் முல்லையை கிளம்பு என கூறுகிறார். கண்ணன் சாரி அண்ணி என கூப்பிட அதற்கு முல்லை என்னை அண்ணி எனக் கூப்பிடாத என்ன நடந்தாலும் உன் பக்கம் தானா நின்னாங்க உனக்காக மாமா கிட்ட எவ்வளவு பேசினாங்க தெரியுமா.
இப்ப அவங்களையே கொண்டுவந்து உள்ள வச்சுட்டல உனக்கு சந்தோஷமா இப்போ உனக்காக சப்போர்ட் பண்ணாங்க பாரு அவங்கள சொல்லணும் அதற்கு கண்ணன் பேச வர முல்லை பேசாதடா என்கிட்ட எதுவுமே பேசாத இனிமேல் என் மூஞ்சிலேயே முழிக்காத என கூறிவிட்டு முல்லை கிளம்புகிறார். இதனை நினைத்து கண்ணன் அழுக பிறகு கதிரிடம் சாரி கேட்கிறார் அதற்கு கதிர் வேண்டாம் என்று தலையாட்டுகிறார்.
மறுபுறம் ஜீவா மூர்த்தி இருவரும் ஆஃபீஸிற்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு எதற்கு தேவையில்லாமல் கேஸ் கொடுத்தீங்க நீங்களும் தான் கண்ணனை அடிச்சு இருக்கீங்க நாங்க கேஸ் கொடுத்தோமா என ஜீவா கேட்க அதற்கு பேங்க் மேனேஜர் போய் கேஸ் கொடுங்க என சொல்கிறார். நாங்க எங்க வரணும் போலீஸ் ஸ்டேஷனுக்காக கோர்ட்டுகா எங்க வேணாலும் நாங்க வருகிறோம் எனக் கூறுகிறார்.
இதெல்லாம் ஞாயமான பேச்சாங்க தம்பிய அடிச்சா அண்ணனுக்கு கோவம் வரதாங்க இல்ல அதற்கு இப்ப நாங்க என்ன செஞ்சா நீங்க கேச வாபஸ் பண்ணுவீங்க சொல்லுங்க சமாதானமா பேசிக்கலாம் என மூர்த்தி கூறுகிறார் அதற்கு அடி வாங்கியவர்கள் கேஸ்லாம் வாபஸ் வாங்க முடியாது என சொல்லி முடிக்கிறார்.
பிறகு அனைவரும் பேசி மேனேஜரிடம் சமாதனம் வாங்கி இருக்கின்றனர் மேனேஜரும் கேசை வாபஸ் வாங்கிய விடுவதாக கூற பிறகு உங்கள் தம்பி கிரெடிட் கார்டை வாங்கியதில் இருந்து பணம் கட்டவில்லை இதையெல்லாம் வாங்கி நாங்கள் பேங்கில் தர வேண்டும் இதுதான் எங்களுடைய வேலை எனக் கூற அதற்கு ஜீவா எவ்வளவு என்று சொல்லுங்கள் நாங்கள் தருகிறோம் என கூறுகிறார். அதற்கு ஆபிசர் 3.5 லட்சம் ஆகும் எனக் கூறியவுடன் ஜீவா, மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார்கள். சார் அவ்வளவு பணமா வாங்கி இருக்கா எனக் கூறிய அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.