இவ்வளவு பட்டும் திருந்தாத ஐஸ்வர்யா.! நாக்கை பிடுங்கி கிட்டு சாவுற மாதிரி நான்கு கேள்வி கேட்ட சித்தி.. பதம் பார்க்க செல்லும் முல்லை

pandiyan-stores-27
pandiyan-stores-27

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து விட்டார்கள் என நினைத்து அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் தம்பிக்கு ஒன்றென்றால் அனைவரும் ஒன்றிணைவோம் என்பதினை காட்டுப் வகையில் இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.

கதிர் போலீஸிடம் மாட்டிக் கொண்ட நிலையில் இதற்கு முழுக்க முழுக்க ஐஸ்வர்யா கண்ணனின் பேராசை தான் காரணம் எனவே ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்து விட்டார்கள் என்பதை தெரிந்துக் கொண்ட ஜீவா மற்றும் மூர்த்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு கதிரைப் பார்த்து வருத்தமடைகின்றனர்.

பிறகு ஜிவா, மூர்த்தியிடம் கதிரை இப்படி ஒரு நிலைமையில் பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருப்பதாக கூறுகிறார் இன்னைக்குள் எப்படியாவது அவனை வெளியில் எடுக்கணும் அதற்கு எல்லா ஏற்பாட்டையும் செய்கிறேன் என்று சொல்கிறார். இவ்வாறு இவ்வளவு நடந்த பிறகும் சின்ன குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் அதே திமிருடன் ஐஸ்வர்யா இருந்து வருகிறார்.

ஆனால் ஐஸ்வர்யாவின் சித்தி நாக்கை புடிங்கிட்டு சாவுற மாதிரி நல்லா நான்கு கேள்வி கேட்டு விட்டார். அதேபோல் கதிரின் இந்த நிலைமைக்கு காரணமான ஐஸ்வர்யாவை திட்ட வேண்டும் என முல்லை மிகுந்த கோபத்துடன் இருக்கிறார் மேலும் ஐஸ்வர்யாவை தேடி முல்லை செல்கிறார். அதாவது கொஞ்சம் ஆட்டமா போட்டா என்ன ஆட்டம் கடன்ல எல்லா பொருட்களையும் வாங்கி என்னமோ இவர் சொந்தமா வேலைக்கு போய் சம்பாதிச்சு வாங்குனது போல என்ன ஆட்டம். அதுதான் சரியான நேரத்தில் பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டாங்க இருக்கிறத வச்சு ஒழுங்கா வாழவில்லை என்றால் இந்த நிலைமைதான் ஆகும்.

இவ்வாறு இப்படி ஒரு நிலைமையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து வரும் நிலையில் இதற்கு மேல் நான்கு அண்ணன் தம்பிகளும் ஒன்றிணைந்து வாழ அதிக வாய்ப்பு இருக்கிறது மேலும் இதற்கு மேலும் ஐஸ்வர்யா நிறைய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றும் அளவிற்கு இருந்து வருகிறது.