விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணன் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்துக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வரும் நிலையில் கடனைப் பற்றி கவலைப்படாமல் ஐஸ்வர்யா தொடர்ந்து கடன் வாங்கி வருகிறார்.
கண்ணன் வேண்டாம் என கூறினாலும் அதனைக் கேட்காமல் ஐஸ்வர்யா மிகவும் திமிராக இருந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி நடு இரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க இதனை பார்த்த தனம் என்ன ஆனது என கேட்கிறார் அதற்கு மூர்த்தி நெஞ்சு வலிப்பது போல் நடிக்க பிறகு கண்ணன் கடன் வாங்கியது போலவும் அவனை 4, 5 பேர் அடிப்பதற்காக துரத்தி வருவது போலவும் கனவு கண்டதாக கூறுகிறார்.
அதற்கு தனம் எப்பொழுது பார்த்தாலும் தம்பிகளை பற்றி நினைத்துக் கொண்டே இருங்க என சொல்ல அதற்கு மூர்த்தி கண்ணனுக்கு என்ன தெரியும் இவ்ளோ பெரிய மண்டபத்துல வளைய காப்ப வச்சிருக்கான் ஜீவா அப்படி கிடையாது அவனுக்கு எல்லாமே தெரியும் என கூறுகிறார். பிறகு விடிந்தவுடன் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் இன்னைக்கு என்ன நீ ரொம்ப அழகா இருக்க என மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆபீஸர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.
அப்பொழுது ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அனுப்பி விட்டு கண்ணனிடம் பணத்தை எப்பொழுது தர இன்னும் ஒரு வாரத்தில் தரலினா நீ இருக்க மாட்ட கிரிடிட் செஞ்சு வாங்கும் போது மட்டும் நல்லா வாங்கினீங்களே என்ன கூற பிறகு கண்ணன் இன்னும் ஒரு வாரத்தை தந்து விடுவதாக சொல்கிறார். ஆபீஸர்களும் கிளம்பி விட ஐஸ்வர்யா இதனை பற்றி கவலைப்படாமல் கொடுத்து விடலாம் கண்ணா என கூறுகிறார்.
அப்பொழுது ஐஸ்வர்யாவின் சித்தி தற்பொழுது ஐம்பதாயிரம் தான் கிடைத்ததாகவும் சரியாக வட்டியை தந்து விட வேண்டும் என சொல்லிவிட்டு கிளம்ப பிறகு தனம் வருகிறார். ஏதாவது பணம் வேண்டுமா வளைய காப்பு வேற பெரிய மண்டபத்துல வச்சிருக்கீங்க செலவுக்கு என்ன பண்றீங்க உண்மையா உங்க கிட்ட பணம் இருக்கா வேணும்னா நான் தரேன்னு என கூற ஐஸ்வர்யா அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் நாங்க பணத்தை ரெடி செஞ்சு விட்டோம் என சொல்கிறார். பிறகு கண்ணனை தனியாக அழைத்து கடன் வாங்கின விஷயத்தைப் பற்றி தனத்திடம் கூறக் கூடாது என சொல்ல இதோட இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.