விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் சுக்கு நூறாக உடைந்து உள்ளது மேலும் அனைவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை நினைத்து தனம், மூர்த்தி வருத்தப்படும் நிலையில் ஆனால் இதனை கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக என்ஜாய் செய்து வருகிறார்கள்.
அதாவது மீனாவின் தங்கை திருமணத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் தனித்தனியாக மொய் எழுதிய நிலையில் ஜீவா-மீனா பெயரில் மட்டும் எழுதவில்லை எனவே இதனால் பிரச்சனை ஏற்பட பிறகு அந்த வீட்டிற்கு இதற்கு மேல் வரமாட்டேன் அவர்கள் இருவரும் நான் உங்களுடைய தம்பிகள் என கூறி விடுகிறார்.
இவ்வாறு இந்த அனைத்து பிரச்சனைக்கும் கண்ணன் தான் காரணம் என்பதால் அவரை மூர்த்தி அறைந்து விட பிறகு வீட்டிற்கு சென்றவுடன் தனமும் கண்ணனை குறை சொல்கிறார் எனவே கோபப்பட்ட ஐஸ்வர்யா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க முடியாது என கூறிவிட்டு தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார்.
இவ்வாறு கண்ணன் மாதம் 40 ஆயிரம் சம்பளம் வாங்குவதால் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கின்றனர். இந்த நேரத்தில் தனம் ஜீவாவை வீட்டிற்கு அழைப்பதற்காகவும், கதிர் கண்ணன்-ஐஸ்வர்யாவை அழைப்பதற்காக செல்கின்றனர் ஆனால் இருவருமே வர முடியாது என கூறிவிடுகிறார்கள்.
எனவே இதனால் மூர்த்தி, தனம், கதிர் என அனைவரும் சோகத்தில் இருந்து வரும் நிலையில் மறுபுறம் ஐஸ்வர்யா மிகவும் மகிழ்ச்சியாக கண்ணனுடன் இருந்து வருகிறார். அதாவது கண்ணன் வீட்டிற்கு வந்தவுடன் பாசமாக சாப்பிட வைக்கிறார் மேலும் அழகாக கிளம்பியுள்ள நிலையில் படம் பார்க்க போகலாமா என கேட்கிறார். அதற்குக் கண்ணனும் போலாம் என கூற பிறகு இவ்வாறு எனக்கு நீ சமைத்து தருவது வந்தவுடன் பாசமாக அழைப்பது போன்றவை பிடித்திருப்பதாக கூற இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் அதேபோல் ஜீவாவும் தன்னுடைய மாமனார் வைத்துள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கிறார் அங்கு சென்று வேலை பார்க்க உள்ளார்.