சமாதானப்படுத்த சென்ற கதிரை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.! கெஞ்சியும் தனத்தை மதிக்காத ஜீவா.. தோல்வியில் முடிந்த முயற்சி

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து இந்த சீரியலில் பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து சின்னாபின்னமாகியுள்ளது.

அதாவது கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுடைய வாழ்க்கையில் தற்போது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மீனா தங்கை எண் திருமணம் மிகவும் கோலாலமாக நடைபெற்ற நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் தங்களுடைய பெயரில் மொய் எழுதினர். அதில் கண்ணன், கதிர், மூர்த்தி என மூவரும் தங்களுடைய மனைவியின் பெயருடன் தனியாக மொய் எழுத ஜீவா-மீனா பெயரில் மட்டும் மொய் எழுதவில்லை.

எனவே ஜீவா இதற்கு மேல் அந்த வீட்டிற்கு வர முடியாது எனவும் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிவிடுகிறார். இப்படி இருக்கையில் அனைவரும் வீட்டிற்கு சென்றவுடன் தனம் அனைத்தும் கண்ணன் செய்த வேலையினால்தான் எனக் கூற கோபமடைந்த ஐஸ்வர்யா சும்மா நிறுத்துங்க அக்கா எதுக்கெடுத்தாலும் அவரை திட்டிக்கிட்டு இருக்கீங்க என சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கிளம்பி தன்னுடைய அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார்.

அதேபோல் ஜீவாவை இனிமேல் அவர்களுடைய வீட்டில் விடக்கூடாது என்பதற்காக ஜஹார்த்தனன் கடையை எழுதி தருவதாகவும், வேண்டுமென்றால் புதிய வீடு கட்டி தருவதாகவும் கூறி இங்கேயே இருக்க வைக்கிறார். இன்றைய எபிசோடில் இவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்பதற்காக கதிர் கண்ணன்-ஐஸ்வர்யாவை தேடி செல்கிறார். அங்கு அவர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைக்க அதற்கு ஐஸ்வர்யா முடியாது எனக் கூற பிறகு போய்விடுகிறார்.

அதே போல் தனமும் ஜீவா-மீனாவை அழைக்க செல்ல அங்கு ஜீவாவும் வர முடியாது என கூற பிறகு இதற்கு மேல் இப்படி என்னை நினைத்து வருத்தப்பட வேண்டாம் நான் அங்கு வந்தால் சரியாக இருக்காது என சொல்ல பிறகு மீனா விடம் கேட்கிறார். அதற்கு மீனா மாமா எங்க இருக்குறாங்க அங்க தான் நீங்களும் இருப்பீங்க நான் மட்டும் எப்படி நானும் ஜீவா கூடாதா இருப்பேன் எனக் கூற பிறகு வீட்டிற்கு கிளம்புகிறார் தனம்.