வீட்டை விட்டு சென்று சித்தியிடம் பங்கு கேட்கும் ஐஸ்வர்யா.! ஜீவா-மீனா பேசுவதை ஒட்டி கேட்டு விட்டு ஜஹார்த்தனன் எடுத்த அதிரடி முடிவு..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலின் மூலம் கூட்டுக் குடும்பம்  என்றால் எவ்வளவு சண்டைகள் இருக்கும், எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தனித்துவம் வாய்ந்த சீரியலாக மக்கள் மத்தியில் விளங்கி வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒட்டுமொத்தமாக சுக்கனூராக உடைந்துள்ளது. அந்த வகையில் ஜீவா மற்றும் மீனாவை தொடர்ந்து கண்ணன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே அடுத்ததாக என்ன பிரச்சனை நடக்கப் போகிறது என்பதனை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வீராப்பாக கிளம்பிய ஐஸ்வர்யா தன்னுடைய சித்தி வீட்டிற்கு சென்று பங்கு கேட்கிறார் எனவே அங்கு தான் இவர்கள் தங்க இருக்கின்றனர். கண்ணன் செய்த தவறால்‌ தான் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துள்ளது. அதாவது 40,000 சம்பளம் வாங்கும் காரணத்தினால் அதனை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து சீன் போடுகிறார். எனவே தன்னுடைய பொண்டாட்டி கூறியதும் வீட்டை விட்டு சென்ற நிலையில் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

இதனை அடுத்து ஜிவா மீனா வீட்டில் தனியாக பீல் பண்ணும் நிலையில் பிறகு மீனா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். மேலும் நம்ம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ இந்த அளவுக்கு நீ ரியாக்ஷன் கொடுத்திருக்க வேண்டாம் அந்த மொய் லிஸ்ட்ட பார்த்து உடனே எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது நம்மளுடைய பெயர் இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருந்ததனால் தான் உன்கிட்ட அதைப்பற்றி சொன்னேன் என சொல்கிறார்.

இதற்கு ஜீவா நீயும் என்ன புரிஞ்சுக்கலையா என கேட்கிறார் அதற்கு மீனா நீ  எந்த மனநிலையில் இருந்து பேசி இருக்கிறாய், எதற்காக பேசுகிறாய் என்று எனக்குப் புரிகிறது ஆனாலும் கொஞ்சம் நீ பொறுமையா இருந்திருக்கலாம் என தோன்றுகிறது என சொல்ல அதற்கு ஜீவா நான் கொஞ்ச நாளாக பொறுமையாக தான் இருந்தேன் அண்ணன் எது செய்தாலும் சரிதான் என நம்பி இருந்தேன் ஆனால் என்னை இந்த அளவுக்கு அவமானப்படுத்துவார்கள் என நினைக்கவில்லை என சொல்லி அழ பிறகு மீனான எதையும் நினைத்து கவலைப்படாதே உன் கூட நான் இருக்கிறேன் எனக் கூறி ஆறுதல் கூறுகிறார்.

மேலும் கண்ணன் மேல் தான் தப்பு இருக்கும் மற்றவர்கள் மீது எந்த தவறும் இருக்காது எனக் கூற மீனா நம்ம குடும்பம் பிரிந்த மாதிரி ஆயிடுச்சு என கவலைப்படுகிறார். இவ்வாறு இதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்க இதனை மீனாவின் அம்மா கேட்டுவிட்டு ஜகார்த்தனனிடம் சொல்ல பிறகு இவர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டை அவர் பெயரில் எழுதி வைக்க போகிறார்கள் என தெரிய வருகிறது.