ஒட்டுமொத்த குடும்பத்தையும் நார் நாராக கிழித்து பல உண்மைகளை போட்டு உடைத்த ஜீவா.! விஷத்தை கக்கிய கண்ணன், கதிர்.. எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் நிக்க வைத்து பல உண்மைகளை கூறிய நிலையில் ஜீவா அவருடைய ஆதங்கத்தை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

அதாவது கதிர், கண்ணன் இருவரும் தனியாக சம்பாதிக்க ஆரம்பித்த நிலையில் ஜீவாவை பெரிதாக மதிக்காமல் இருந்து வருகிறார். மேலும் மூர்த்தி  ஜீவாவுக்கு செலவுக்கு பணம் தராமல் இருந்து வரும் நிலையில் ஜீவா மீனா மற்றும் தன்னுடைய மகளுக்கு எதுவும் வாங்கித் தர முடியாமல் தவித்து வரும் நிலையில் அனைத்தையும் மனதிற்குள் வைத்து கதறி வருகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் எபிசோடில் கண்ணன் ஜீவா-மீனா பெயரை விட்டுவிட்டு மற்ற அனைவர் பெயரிலும் மொய் எழுதிய நிலையில் இதனால் பெரும் பிரச்சனையே நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவா இதற்கு மேல் அந்த வீட்டிற்கு வர முடியாது எனக் கூறிய நிலையில் தன்னுடைய மனதில் இருந்து அனைத்தையும் போட்டு உடைக்கிறார்.

அதாவது கதிர் கார் வாங்கிய நிலையில் அதனை பற்றி ஜீவாவிடம் எதுவும் கேட்கவில்லை ஒரு முறை ஜீவா காரை எடுத்துச் செல்லும் பொழுது தெரியாமல் ஒரு வண்டி வந்து மோத இதனால் ஜீவாவை அனைவரும் நிக்க வைத்து திட்டினார்கள். மேலும் முதல் மாசம் சம்பளம் வாங்கிய கண்ணன் வீட்டில் பணம் தந்த நிலையில் நீ மட்டும் தான் இந்த மாசம் பணம் தரவில்லை என ஜீவாவை குத்தி காமித்தான்.

மேலும் மூர்த்தியும் கல்லா சாவியை பூட்டி எடுத்து சென்ற நிலையில் ஆட்டோவுக்கு பணம் தர முடியாமல் ஜீவா பிறகு வண்டி எடுத்துக்கொண்டு சென்றார். எனவே அதே போல் கதிர் அவருடைய மாமியாருக்கும், மூர்த்தி தனத்தின் அண்ணனுக்கும் அனைவரும் மாறி மாறி உதவி செய்து கொண்டு வரும் நிலையில் ஜீவாவால் எந்த ஒரு உதவியும் தன்னுடைய மாமனர்காக செய்ய முடியவில்லை.

இந்நிலையில் திருமண வேலைகளை ஜீவா தான் பார்த்த நிலையில் எப்பொழுது பார்த்தாலும் மூர்த்தி போன் செய்து ஜீவாவை கடைக்கு வருமாறு கூறிய நிலையில் இதனால் கடுப்பான ஜீவா நீங்க என்ன சின்ன பிள்ளையா சொன்னா உங்களுக்கு புரியாதா என கூறுகிறார் இவ்வாறு மனதில் இருந்து அனைத்தையும் போட்டு உடைக்க அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.