திருமணத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தினால் அசிங்கப்பட்ட ஜீவா.! குடித்துவிட்டு கதிரை திட்டியதால் மகிழ்ச்சியில் ஜகார்த்தனன்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்த பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் ஜீவாவை அசிங்கப்படுத்த இருக்கிறது.

அதாவது ஜீவா பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் இதனால் மூர்த்தியிடம் சண்டை போட பிறகு கல்லா சாவியை மூர்த்தி ஜீவாவிடம் தருகிறார் இப்படி ஒரு சண்டை தற்போது முடிந்த நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் மீனாவின் தங்கை திருமணத்திற்கு வந்துள்ளது.

எனவே திருமணம் முடிந்தவுடன் அனைவரும் மொழிபோட நினைக்க அந்த நேரத்தில் மீனா ஜீவாவிடம் மொழி போட சொல்கிறார் ஆனால் ஜீவா எந்த காரியத்திற்கும் தனியாக போட்டது இல்லை அனைவரும் சேர்ந்துதான் போட்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தற்பொழுது கதிர், கண்ணன் இருவரும் தனித்தனியாக சம்பாதித்து வருவதால் கண்ணன் தனியாக மொழி போட அதே நேரத்தில் கதிரும் முல்லை அம்மாவின் அறிவுரையின்படி தனியாக பணம் எழுதுகிறார்.

பிறகு தனம் அனைவருக்கும் சேர்த்து ரூபாய் 50 ஆயிரமாக போட்டு விடலாம் எனக் கூற ஆனால் இது தெரிந்து கொள்ளாமல் ஜீவா பணம் போடாமல் இருக்க அனைவரும் தனித்தனியாக மொழி எழுதிவிட்டு வருகின்றனர். இதனை அடுத்து மறுபுறம் ஜீவா வேண்டாம் வேண்டாம் என சொல்ல தன்னுடைய மான்மனாருடன் சேர்ந்து மது அருந்தி விடுகிறார்.

இவ்வாறு இந்த நேரத்தில் கதிர் ஜீவாவை அழைத்துச் செல்வதற்காக வர என்ன விடுடா உங்க அண்ணன் பண்றது பத்தாதா இப்ப நீ வேற வந்துட்டியா என கூறி திட்ட இதனால் கதிர் அதிர்ச்சடைகிறார். ஆனால் இதனைப் பார்த்த ஜகார்த்தனனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் ஜீவா மீனாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜகார்த்தனன் இருந்து வருகிறார்.