தனம் சொல்லியும் கேட்காமல் குடும்பத்தை பிரிய முடிவெடுத்த ஜீவா.! மன்னிப்பு கேட்க சொல்லி கெஞ்சும் கதிர்.. சந்தி சிரிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினையும் குடும்பத்திற்கு வந்திருக்கும் மருமகள்களின் ஒற்றுமையையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.

இப்படி ஒளிபரப்பாகி வந்த சீரியலில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சந்தி சிரிக்கும் நிலமை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது ஜீவா செலவு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால் மனதில் பல கவலைகளை வைத்திருக்கிறார். கண்ணனும் வேலைக்குப் போகும் நிலையில் அவனிடமும் பணம் இருக்கிறது. அதேபோல் கதிரும் தன்னுடைய ஹோட்டலில் வரும் பணத்தை வைத்து செலவுகளை பார்த்துக் கொள்கிறார்.

மூர்த்தியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடையில் வரும் ஒட்டுமொத்த பணத்தையும் வைத்திருக்கும் நிலையில் ஜீவா மட்டும் பத்து ரூபாய் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். அப்படி செலவுக்கு பணம் கேட்டாலும் மூர்த்தி மிகவும் குறைவான பணத்தையே தருகிறார் அதோடு மட்டுமல்லாமல் வீண் செலவு வேண்டாம் எனவும் கூறிவரும் நிலையில் தற்பொழுது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஜீவா மீனாவையும் பாப்பாவையும் அழைப்பதற்காக மளிகை கடையை ஒழுங்காக சாத்தாமல் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு போய் இருக்கும் நிலையில் மூர்த்தி கடைக்கு வர அந்த நேரத்தில் அனைவரும் கடைக்கு முன்பு நிற்கின்றனர். இதனால் கோபமடைந்த மூர்த்தி வீட்டிற்கு சென்று கடையை கூட எதற்கு சாத்தாம வந்த என சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா சும்மா கடுப்பேத்தாதீங்க அண்ணா கல்லாப்பெட்டியை தூக்கிட்டு ஓடிடுவேன்னு பூட்டி வச்சுட்டு போனீங்களா மீனாவும் பாப்பாவும் நடுரோட்டில் நின்னாங்க அவங்கள அழைக்கத்தான் போன அந்த சின்ன வண்டியில் பெட்ரோல் இல்லைனா எங்கேயாச்சும் நான் நின்னுட்டு இருக்க வேண்டியது தான் என தன்னுடைய மனதில் இருக்கும் கவலையை கொட்டி தீர்க்கிறார்.

பிறகு தனம் ஜீவாவை சந்தித்து நீ இப்படி எல்லாம் பேசுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல என சொல்ல அதேபோல் கதிரும் அண்ணா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க உனக்கு தெரியாதான நீ வந்து அண்ணன் கிட்ட மன்னிப்பு கேளு எல்லாம் சரியாயிடும் என சொல்லியும் கதிரின் கையை ஜீவா உதறி விடுகிறார். இவ்வாறு ஜீவா இதற்கு மேல் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இவர்களை விட்டு பிரிந்து மீனாவின் அப்பாவிடம் சென்று வேலைக்காக நிற்கப் போகிறாரா என்பதினை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.