ஐஸ்வர்யாவை பங்கமாக திட்டும் முல்லை.! ஜீவாவின் மேல் கடும் கோபத்தில் ஜகார்த்தனன்.. மூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி

pandiyan-stores-5790
pandiyan-stores-5790

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன்-ஐஸ்வர்யாவை கதிர் தனது அண்ணனின் சம்மதம் இல்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். எனவே இதனால் முல்லை கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கண்ணன் சாப்பிடாமல் இருக்க அவர்களை சாப்பிடுமாறு தனம் கூறுகிறார் பிறகு இருவரும் சாப்பிட அண்ணன் வந்தால் என்ன நடக்கும் என்ற பயத்தில் இருந்து வருகின்றனர். இவர்கள் எதற்கு மீண்டும் இங்கு வந்தார்கள் எவ்வளவு பட்டாலும் அவங்களுக்கு அறிவே கிடையாது எனக் கதிரை முல்லை திட்டுகிறார்.

மறுபுறம் மீனாவிடம் ஜகார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் பிரச்சனையையும் பிரிக்கவே முடியாது என பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் ஜீவா வருகிறார். ஜீவா வந்தவுடன் ஜகார்த்தனன் அமைதியாக பேச பிறகு ஜீவா ஒரு நிமிடம் வந்து விடுவதாக கூறிவிட்டு உள்ளே செல்ல அதற்கு மீனா இன்னும் மட்டும் அந்த குடும்பத்தை திட்டிக்கிட்டிருந்தீங்க அப்படியே ஜீவா வந்தது மாறுறீங்களேப்பா என கேட்க உன்கிட்ட எதா இருந்தாலும் சொல்லலாம் ஆனால் மாப்பிள்ளைக்கிட்ட அப்படி சொல்ல முடியாது.

எனக்கு அந்த குடும்பத்து மேல கோபம் இருக்குதா ஆனா மாப்பிள்ளை சந்தோஷமா இருக்கணும்னா என்ன வேணாலும் பண்ணுமா என சொல்கிறார். இந்த நேரத்தில் ஜீவா இந்த லட்ச ரூபாய் பணத்தை எடுத்து வந்து ஜகார்த்தனன் இடம் தர அதிர்ச்சடைகிறார். பிறகு மூர்த்தி பணத்தை கட்டி விட்டதாக ஜீவாக்கு ஜகார்தனன் அந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என கூறி பிறக்கும் அதற்கு ஜீவா முடியாது என்ன சொல்லிவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.

இதனை அடுத்து மீனா முல்லை இடம் ஃபோன் செய்து நன்றாக இருக்கிறீர்களா என கேட்க ஏதோ இருக்கிறேன் என சொல்கிறார் பிறகு ஐஸ்வர்யா, கண்ணன் வீட்டிற்கு வந்தது என அனைத்தையும் கூற இதனால் எனக்கு கடுப்பாக இருப்பதாக முல்லை கூறிவிட்டு போனை வைத்து விடுகிறார். இதனை பற்றி ஜீவாவிடம் மீனா கூற நல்லது தான் என கூறுகிறார்.

இரவு ஆனதும் இந்நேரம் அந்த வீட்டில் நாங்கள் சீரியல் பார்த்துகிட்டு இருப்போம் என கண்ணன் கூற அதற்கு இங்கேயும் டிவி தான் இருக்கு நீ போய் பாரு என தனம் சொல்கிறார். அதற்கு வேண்டாம் அங்கு பேசுவதற்கு யாருமே இருக்க மாட்டாங்க என சொல்ல உடனே முல்லை அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க அங்கே இருக்க வேண்டியதுதானே என கோபப்பட கண்ணன் என்ன இப்படி மாறிட்டீங்க இவ்வளவு கோபப்படாதீங்க உங்களுக்கு செட் ஆகல என கூறி கிண்டல் செய்கிறார்.

நான் இவனை கூட மன்னிச்சிடுவேன் ஆனா இவளை மன்னிக்கவே மாட்டேன் நானும் அவரும் போனப்போ எங்களை சுத்தமா மதிக்கவே இல்ல என்ன ஆட்டம் போட்டா எனக் கூற அதற்கு தனம் நீ ரொம்ப ஓவரா பேசுற என கூறுகிறார். மூர்த்தி வீட்டிற்கு வருவதை தெரிந்து கொண்டு கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் ஓடி ஒளிய தானம் கண்ணன் ஐஸ்வர்யா இருப்பதை பற்றி சொல்ல பயப்படுகிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைய இதனை அடுத்து இருவரையும் அழைத்து வந்த மூர்த்தியிடம் காமிக்க மூர்த்தி உங்களை எதற்கு அழைச்சிட்டு வந்த என  கோபப்படுகிறார்.