பணம் தரலைனா அசிங்கமா போயிடும் என கூறும் சித்தி.! ஐஸ்வர்யா, கண்ணனை வீட்டிற்கு அழைத்து சென்ற கதிர்.. உச்சக்கட்ட கோபத்தில் முல்லை

pandiyan-stores-48
pandiyan-stores-48

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் எப்படியோ ஒரு வழியாக கடன் அடைந்து விட்டதாக கண்ணன் ஐஸ்வர்யா நிம்மதியாக இருந்து வரும் நிலையில் அவருடைய சித்தி வீட்டிற்கு வந்து அந்த கடனை எல்லாம் அடைச்சிட்டீங்க என்னோட கடனை எப்படி அடைப்பீங்க வளைகாப்பு முடிஞ்சு அடுத்த நாள் பணத்தை தரேன்னு சொன்னீங்க இன்னைக்கு அந்த நாள் தான் என கூறுகிறார்.

அதற்கு கண்ணன் வளைகாப்பு நடக்கவில்லையே என சொல்ல பணம் கொடுத்தவுங்கள்ட சொல்ல முடியுமா பணம் கொடுக்கலினா அசிங்கமா போயிடும் என சொல்ல கண்ணன் தந்து விடுவதாக சொல்கிறார். உங்களுக்கு உதவி செய்த பாவத்துக்கு அப்புறம் நான் அசிங்கப்பட்ட விடுவேன் என சொல்ல அதற்கு ஐஸ்வர்யா சித்தி உனக்கு நலமா புரியுதா இல்லையா வளைகாப்பு நல்லபடியா நடந்திருந்தால் உனக்கு காசு கொடுத்து இருப்போம் வீடியோவும் எனக் கூற அதற்கு அந்த வீடியோ விஷயத்தை பத்தி மட்டும் பேசாத சொல்லிட்டேன் அதுல தாண்டி விழுந்துட்டேன் எனக் கூறி சத்தம் போடுகிறார்.

பிறகு மேலும் இவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் ஹலோ பிரண்ட்ஸ் பணம் கொடுக்க முடியாத காரணத்தினால் என் புருஷன் வாய உடைச்சுட்டாங்க எனக்கூறி அதையும் வீடியோவாக போட வேண்டியதுதானே என சொல்ல அதற்கு கண்ணன் மண்டபத்துக்கு, சாப்பாட்டுக்கு என அதுக்குன்னு கொடுத்த பணம் எல்லாம் மறுபடியும் வருமானு எனக்கு தெரியல என சொல்ல அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என சித்தி கூறுகிறார்.

நானா இந்த மகாராணிக்கு இப்படி வளையகாப்பு நடத்தணும்னு சொன்னேன் எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னேன் நீங்க கேட்டீங்களா இப்ப நீங்க விழுந்தது பத்தாதுன்னு என்னையும் சேர்த்து தள்ளிவிட பாக்குறீங்களா இரண்டு நாட்களுக்குள் பணம் தர வேண்டும் என சொல்ல அதற்கு சித்தி ஏன் சித்தி இப்படி சொல்றீங்க எனக் கூறுகிறார் பிறகு வெரும் பயல நம்பி வந்தியல அனுப வை எனக் கூறிவிட்டு கிளம்புகிறார்.

இப்பதான் ஒரு பிரச்சனை முடிஞ்சது அதுக்குள்ள இன்னொரு பிரச்சனைனா என்ன பண்றது ஐஸ் என்ன கண்ணன் வருத்தப்படுகிறார். இந்த நேரத்தில் கதிர் வர ஐஸ்வர்யா சாரி மாமா எங்களால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் என சொல்ல அதற்கு அது எல்லாம் விடு பாத்துக்கலாம் என கதிர் கூறுகிறார். வளைகாப்பு நடத்தலாம் உன்ன ஆசைப்பட்ட ஆனா அது தான் முடியாம போயிடுச்சு இல்லை என கேட்க அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என ஐஸ்வர்யா கூறுகிறார்.

நீங்க ஜெயிலுக்கு போனது நெனச்சு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு என்ன சொல்ல பிறகு காபி ஏதாவது வேண்டுமா என கேட்க போய் எடுத்துட்டு வாம்மா என கதிர் கூறுகிறார். வீடு வாடக அது இது எந்த செலவும் இல்ல வாங்குற சம்பளத்தில் செலவு போக மீதிய சேர்த்து வைக்கலாம்ல எனக் கூற அதற்கு கண்ணன் அது அப்படி இப்படின்னு செலவாயிடுச்சு அண்ணன் என்ன கூறுகிறார்.

அண்ணன் அண்ணி எவ்வளவு செலவ பாத்துக்கிட்டாங்க அதை பார்த்து கூட உனக்கு தெரியல உன்ன தனியா விட்டுட்டு போகவே பயமாயிருக்கு வீட்டுக்கு வாங்க போகலாம் எனக் கூற கொஞ்ச நாளைக்கான என கண்ணன் கேட்கிறார் அதற்கு கதிர் நிரந்தரமாக அந்த வீட்டிற்கு வந்து விடுமாறு சொல்கிறார். அது எப்படி மாமா நாங்க தான் இங்க நிறைய பொருளை வாங்கி போட்டுட்டோமே என சொல்ல அதற்கு கதிர் இந்த பொருளை பத்தி மட்டும் பேசாதீங்க எல்லா பிரச்சனையும் இந்த பொருளை எல்லாம் வாங்குனதுனால தான் வந்தது சொல்கிறார்.

பிறகு கண்ணன் வரவில்லை என்றாலும் பிடிவாதமாக அவர்களை வீட்டிற்கு அழைத்து வர தனத்தையும் வீட்டிற்கு வெளியில் அழைத்து செல்ல இவர்கள் இதற்கு மேல் இங்குதான் இருப்பார்கள் என கூறி பேசிக் கொண்டிருக்க ஆனால் மாமா ஏதாச்சும் சொல்லுவாங்க என முல்லை கூறுகிறார். அது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என தனம் இவர்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். இவ்வாறு ஐஸ்வர்யா பிறந்தநாள் தான் கதிர் ஜெயிலுக்கு போனதனால் முல்லைக்கு இது பிடிக்கவில்லை.