சாவின் விளிம்பில் தனம்.. மறைக்க முடியாமல் திணறும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்..

pandiyan-stores-
pandiyan-stores-

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில் தனம் மீனா இருவருக்கும் டாக்டர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது தனத்திற்கு பிரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜில் இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் இவர்கள் அதிர்ச்சடைகிறார்கள். எனவே தனம் நான் செத்துடுவேனா டாக்டர் எனக் கேட்க இப்படி எல்லாம் பேசாதீங்க அக்கா என்ன பேசுறீங்க என மீனா சொல்கிறார்.

பிறகு டாக்டர் எவ்வளவோ பேரு 3வது ஸ்டேஜ், 4வது ஸ்டேஜ்ல வந்து இருக்காங்க பாத்துக்கலாம் நேத்திக்கு டாக்டர் வந்திருக்க வேண்டியது ஆனால் வரல நாளைக்கு வாங்க என சொல்ல தனம் வெளியில் வருகிறார். அப்பொழுது தனம் தனியாக நின்று அழுது கொண்டிருக்க உங்களுக்கு எதுவும் ஆகாது பாத்துக்கலாம் என மீனா சொல்ல எனக்கு ஏதாவது ஆயிடும்னு நான் அழுவுல மீனா மாமா எப்படி தாங்குவார்.

என் புள்ள எப்படி தாங்கும் ஜீவா, கதிர்  எப்படி தாங்குவார்கள் என்னால தான் எல்லாருக்கும் கஷ்டம் கூறி அழுகிறார் பிறகு மீனா எல்லாரிடமும் சொல்லி விடலாம் என சொல்ல அதற்கு தனம் வேண்டாம் என சொல்ல பிறகு தனத்தை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஜீவா இருப்பதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார் என்ன இந்த நேரத்தில் இங்கு இருக்கிற என கேட்க அப்பொழுது பில்லை மறந்து விட்டதாக சொல்கிறார்.

பிறகு தனத்திடம் எப்படி இருக்கீங்க என கேட்க நல்லா இருப்பதாக சொல்கிறார் மீனாவின் அம்மா நல்லா இருக்யா தனம் பாண்டியன் எப்படி இருப்பான் எங்கு போய்ட்டு வரீங்க என கேள்வி கேட்க மீனா நாங்களே வெயிலில் வந்திருக்கிறோம் ஏதாவது போய் எடுத்துட்டு வாமா என்ன சொல்லி அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் ஜீவா பாப்பா நல்லா இருக்கா ஹாஸ்பிடலுக்கு போனேன்னு சொன்னீங்க ஏன் யாரும் வரலை என கேட்க மீனா வந்தான்னு தான் யாரும் வரவில்லை என சொல்கிறார்.

பிறகு ஏன் உங்க மூஞ்சி இப்படி வாடிக்கிடக்கு என சொல்ல வெயிலில் வந்தல்ல அதான் எனக் கூறி அனுப்புகிறார் பிறகு ஜீவாவிற்கு ஃபோன் வர அப்புறம் வருவதாக சொல்கிறார். உடனே மீனா வேலை இருந்தா கிளம்பு என சொல்ல அண்ணி வந்திருக்காங்க நான் எப்படி கிளம்புவேன் என கூற அதை இதையும் பேசி ஜீவாவை அனுப்பி வைக்கிறார்.

பிறகு தனத்தை மீனா ரூமிற்குள் அழைத்து செல்ல என்னால் இந்த கொஞ்ச நேரமே மறைக்க முடியல இது எப்படி நான் மறைக்கப் போறேன் எல்லார்கிட்டயும் எல்லா உண்மையும் சொல்லிவிட வேண்டும் எனக் கூற தனம் முடியவே முடியாது என மீனாவிடம் சொல்கிறார். பிறகு மீனா தனம் இருவரும் வீட்டிற்கு வர ஐஸ்வர்யா, முல்லை, பார்வதி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது எங்கு போய்ட்டு வந்தீங்க அக்காவும் தங்கச்சியும் என பார்வதி கேட்க கோவிலுக்கு போயிட்டு வந்ததாக சொல்கிறார்கள். ஐஸ்வர்யா நானும் வீட்டில் தான் இருக்கிறேன் சொல்லியிருந்தா வந்திருப்பேன்ல என சொல்ல இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.