மீண்டும் லஞ்சம் வாங்கிய கண்ணன்.. மருத்துவமனைக்கு சென்ற மீனா, தனம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores
pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணன் பேங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு இருக்கும் வேலை செய்யும் நபர் ஒருவர் கையெழுத்து போடுமாறு ஃபைல் ஒன்றை கொடுக்கிறார் அதனை திறந்து பார்க்கும் பொழுது அதில் நிறைய பணம் இருப்பது தெரிய வருகிறது.

எனவே கண்ணன் அந்த நபரை அழைத்து என்ன என்ன இவ்வளவு பணம் இருக்கு எனக்கு இதெல்லாம் வேண்டாம் என சொல்ல அதற்கு அந்த நபர் என்ன சார் இப்படி பிழைக்க தெரியாதவங்களாக இருக்கீங்க நீங்க போடுலீனா வேறு ஒருவர் இந்த பணத்தை வாங்கிட்டு கையெழுத்து போட போறாரு கையெழுத்து போடுங்க சார் என சொல்ல எனக்கு இந்த லஞ்சம் எல்லாம் வேண்டாம் என பதறுகிறார்.

பிறகு ஐஸ்வர்யாவின் சித்தி பணம் தரவில்லை என்றால் உங்களை அந்த கடன்காரன்ட்ட மாட்டி விட்டு விடுவேன் எனக் கூறியதை நினைத்து பார்க்க பிறகு வேறு வழி இல்லாமல் கண்ணனும் கையெழுத்து போட்டு கொடுக்கிறார். இந்த நேரத்தில் பழைய ஆபிஸரை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். அந்த நபரிடம் இதற்கு மேல் இப்படி எல்லாம் பணத்தை எடுத்துட்டு வராதீங்க என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுபுறம் வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் முல்லையின் குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் தனம் மிகவும் அமைதியாக இருக்கிறார் எனவே கண்ணன் என்னாச்சு நீ நாங்க இப்ப என்ன பேசிக்கிட்டு இருந்தோம் என்ன உட்கார்ந்துகிட்டு தூங்கறீங்களா என கேட்க இல்லை நீங்க பேசிக்கிட்டு இருந்தாதெல்லாம் நான் காதுல தான் வாங்கிகிட்டு இருந்தேன் என சொல்ல அதற்கு அப்புறம் நாங்க என்ன பேசணும் என்று சொல்லுங்க எனக்கு கேட்கிறார்.

பாப்பா பத்தி தான் பேச்சி கிட்டு இருந்தீங்க என்ன சொல்ல அதற்கு பாப்பா பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம் ஆனால் என்ன பேசிக்கிட்டு இருந்தோம் என சொல்லுங்க என முல்லை சொல்கிறார். இந்த நேரத்தில் மூர்த்தி வீட்டிற்கு வர போன மாசம் பணத்துல 2000 ரூபாய் குறையுது உன் கிட்ட நான் நேத்திக்கு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்று கேட்க என்னிடம் பணம் கொடுத்தீங்களா என தனம் கேட்கிறார்.

ஆமாம் என சொல்ல பீரோவுல தான் இருக்கு நான் போய் பார்க்கிறேன் என சொல்ல முல்லையிடம் சாவியை பார்த்தாயா என கேட்கிறார் அது உங்க பர்ஸ்ல தான் அக்கா இருக்கும் என சொல்ல ஆமாம் என கூறிவிட்டு கிளம்ப போற நேரத்தில் மூர்த்தி உனக்கு என்னதான் ஆச்சு ஏதாச்சும் பிரச்சனையா உங்க வீட்டுக்கு போனியே ஏதாச்சும் சொன்னாங்களா என்ன கேட்க அப்படி எல்லாம் இல்லை என கூறுகிறார்.

பிறகு கண்ணன் மீனா அண்ணி வீட்டுக்கு போனாங்களே அவங்க அப்பா ஏதாச்சும் சொன்னாங்களா அவர் சொல்லக்கூடிய ஆளு தான் என்ன சொல்ல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது ஏன் எல்லாரும் மாத்தி மாத்தி கேள்வி கேக்குறீங்க என கூறிவிட்டு கிளம்புகிறார். மூர்த்தி இதனால் நான் ஏதாவது தப்பா சொல்லிவிட்டேனா எனக் கேட்க அப்படியெல்லாம் இல்லை மாமா என முல்லை கூறுகிறார்.

இதனை அடுத்து மீனா அக்காவுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது அவங்க யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டாங்க அவங்க நல்லபடியா இருப்பாங்க என நினைக்க இந்த நேரத்தில் ஜீவா கயலை தூக்கி வந்து ரைம்ஸ் சொல்லுமாறு சொல்கிறார் பிறகு மீனா சோகமாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்கிறார். மேலும் ஏன் அண்ணி மருத்துவமனைக்கு வந்தது நீ என்கிட்ட சொல்லவே இல்லை அத்தைதான் சொன்னாங்க அவங்க நல்லா இருக்காங்களா என கேட்க நல்லா இருப்பதாக மீனா கூறுகிறார்.

பிறகு முல்லைக்கு அப்படி ஆனதிலிருந்து வீட்டில் யாருக்காச்சம் ஏதாவது ஆய்விடுமோ என்று பயமா இருக்கு எனவே அண்ணியை பத்திரமாக இருக்க சொல்லு என கூறுகிறார். பிறகு காலையில் முல்லை மீனா இருவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் அங்கு நர்சும் ரிப்போர்ட் மீனாவிடம் கொடுக்க தனம் தன்னிடம் தருமாறு கேட்கிறார்.

ஆனால் மீனா முடியாது நீங்க எப்ப எனக்கு தெரியாம டாக்டர் படிச்சீங்க என கேட்கிறார் இவ்வாறு காரணம் பதட்டமாக இருக்கும் நிலையில் எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என் பிள்ளை என்ன ஆகிறது மாமா, ஜீவா, கதிர் எல்லாம் என்ன ஆவாங்க என சொல்ல அதற்கு மீனா அதெல்லாம் எதுவும் ஆகாதுகா என கூறுகிறார் பிறகு மருத்துவர் இவர்களை அழைக்கிறார் அங்கு சென்றவுடன் மருத்துவர் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருக்கிற தனம் என்னவாயிருந்தாலும் சொல்லுங்கள் டாக்டர்.

ஏதாச்சும் பிரச்சனையா நேத்தி உங்கள பாத்துட்டு போனதுல இருந்து ஒரே பதட்டமா இருப்பதாக சொல்கிறார். அதற்கு டாக்டர் உங்களுடைய கணவர் வரவில்லையா எனக் கேட்க மீனா இல்லை நாங்க ரெண்டு பேரு தான் வந்ததாக சொல்கிறார். அதற்கு டாக்டர் உங்களுக்கு முன்னாடி நெஞ்சுவலி ஏற்பட்ட பொழுதே வந்திருக்க வேண்டும் ஆரம்பத்திலே வந்தால்தான் ஈஸியா சரி பண்ண முடியும் என கூற தனம், மீனா இருவரும் அதிர்ச்சடைகிறார்கள். பிறகு டாக்டர் யாரு இப்பெல்லாம் அதைக் கேட்கிறார் என கூறிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.