விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மருத்துவர் மூலம் உண்மையை தெரிந்துக் கொண்ட மீனா தனது அம்மாவிடம் நீ வீட்டிற்கு போ நான் முல்லையையும் பாப்பாவையும் பார்த்துட்டு வரேன் என கூறிவிட்டு செல்கிறார் அதற்கு அவருடைய அம்மா அவங்க வீட்டில் யாரையாவது பார்த்தால் போதும் உடனே மாறிடுவா எனக் கூறி புலம்புகிறார்.
பிறகு தனம் வீட்டிற்கு வர அப்பொழுது தொடர்ந்து ஐஸ்வர்யாவும் முல்லையும் மாறி மாறி கேள்வி கேட்க சும்மா கேள்வி கேட்டுகிட்டு இருக்காதீங்க எனக்கு தலை வலிக்குது நான் போய் தூங்குறேன் என கூறிவிட்டு கிளம்பி விடுகிறார். இவரை அடுத்து மீனா வீட்டிற்கு வந்தவுடன் ஐஸ்வர்யா நான் ஜூஸ் குடிக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் நீங்க வந்துட்டீங்க என சொல்ல அதற்கு உனக்கு ஜூஸ் போட்டு கொடுக்க தான் நான் வந்தனா என்ன சொல்கிறார்.
பிறகு அக்கா எங்க என கேட்க அவங்க தலை வலிக்குதுன்னு ரூமிற்கு சென்றிருப்பதாக முல்லை சொன்ன உடன் கிளம்புகிறார். பிறகு மீனா தனத்திடம் என்னிடம் டாக்டர் அனைத்து உண்மையையும் சொல்லிட்டாங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது ஏன் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லவில்லை என கேட்கிறார். மீனா வாங்க டெஸ்ட் எடுத்து விடலாம் என சொல்ல அதற்கு கொஞ்ச நாள் கழிச்சு எடுத்துக்கலாம் என தனம் கூறுகிறார் ஆனால் முடியாது என மருத்துவமனைக்கு செல்கிறார்.
தனம் மீனாவிடம் முல்லைக்கும் ஐஸ்வர்யாவிற்கும் தெரியக்கூடாது என சொல்ல அதற்கு சரி என கூறிவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். அப்பொழுது மீனா ஐஸ்வர்யா முல்லையிடம் கயல் அக்காவை பார்க்கணும்னு சொல்லி அழுதா அதான் நான் அழைத்துக்கொண்டு போறேன் என கூற அதற்கு முல்லை கயல் அழைச்சிட்டு வந்தா பாப்பாவையும் பாப்பா இல்ல என சொல்ல இப்பலாம் கிள்ளி வச்சுடுரா எனவே தான் அழைத்துக்கொண்டு வரவில்லை என கூறுகிறார்.
இவ்வாறு இவர்கள் கிளம்பியவுடன் ஐஸ்வர்யாக இவர்கள் இருவரும் பண்றது ஒன்னும் சரியில்லை கண்டுபிடிக்கணும் என சொல்கிறார். பிறகு மருத்துவமனைக்கு சென்றவுடன் தனத்தை மீனா சமாதானப்படுத்துகிறார் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது போகும் போது சந்தோஷமா தான் போவோம் என ஆறுதல் கூற தனத்தை டெஸ்ட் எடுப்பதற்காக அழைக்கிறார்கள்.
எனவே அதற்கான பணத்தை கட்ட வேண்டும் என மீனா சென்று நான் அக்காவுக்கு ஆறுதல் சொல்லுகிறேன் ஆனால் எனக்கு உள்ளுக்குள் பயமா இருக்கிறது என கூறிவிட்ட பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் சாமியை வேண்டுகிறார் அதே போல் தனமும் பிள்ளையார் சாமியை வேண்டிக் கொள்கிறார் பிறகு டெஸ்ட் எடுப்பதற்காக தனம் சென்று விட்டு வர டெஸ்ட் எடுத்துட்டாங்களா அக்கா உங்களுக்கு ஏதாச்சும் வலிச்சு தா எனக் கேட்க இல்லை என்று தனம் சொல்கிறார்.
எனக்கு பயமாக இருக்கிறது எதுவும் சரியா படல எனக்கு அதெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது அக்கா நம்புங்க என ஆறுதல் சொல்ல பிறகு வீட்டிற்கு கிளம்புகிறார்கள். எப்பொழுது வந்தீங்க மாமா என தனம் கேட்க இப்பொழுதுதான் என கூறுகிறார். மூர்த்தி கயல் எப்படி இருக்கா என கேட்க அதற்கு தனம் என்கிட்ட ஏன் கேக்குறீங்க மீனா கிட்ட கேளுங்க என கூறியவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
நீதானே கயல பாக்க போனேன்னு சொன்ன ஆமாம் அழுதுகிட்டே இருந்தா என்ன பார்த்தவுடன் அழுகையை நிறுத்திட்டா என சொல்ல அதற்கு மூர்த்தி எது கேட்டாலும் மாத்தி மாத்தி பேசுற உனக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னியே அது இன்னமும் இருக்கா என கேட்க இல்லை அது காலையிலேயே சரியாயிடுச்சு எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு மீனாவும் சென்று தனத்திற்கு ஆறுதல் சொல்கிறார் இவ்வாறு தனமும் தனது வீட்டிற்கு சென்று விட இவர்கள் செய்வது சரி இல்லை ஏதோ இருக்கு என முல்லை, ஐஸ்வர்யா யோசிக்கிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.