விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் தனம் வெளியில் சென்று விட்டு வருவதாக கூற இந்த நேரத்தில் பார்வதி எங்க போற தனம் என கேட்கிறார் அதற்கு தன்னுடைய வீட்டிற்கு செல்வதாகவும் விருந்தினர் ஒருவர் வந்திருப்பதாகவும் கூற அதற்கு ஏன் இப்போ போற வெயிலு போனதும் சாயந்திரமா போகலாம்ல என சொல்கிறார்.
அதற்கு தனம் போக வேண்டும் என சொல்ல இந்த நேரத்தில் மூர்த்தி வருகிறார். அவரும் எங்க போற என கேட்க இந்த நேரத்தில் முல்லை அக்காவுக்கு அனைவருக்கும் பதில் சொல்லியே வாய வலிச்சிருக்கும் என சொல்லிவிட்டு அக்கா அவுங்க வீட்டுக்கு போறாங்களாம் மாமா என கூறுகிறார். அதற்கு மூர்த்தி தான் அழைத்து செல்வதாக கூற வேண்டாம் நானே போறேன் என தனம் சொல்கிறார்.
பிறகு மூர்த்தி ஆட்டோ பிடித்து வர தனம் மருத்துவமனைக்கு செல்கிறார் அங்கு சென்று உட்கார்ந்து இருக்கும்பொழுது இந்த நேரத்தில் மீனா மற்றும் அவருடைய அம்மா அதே மருத்துவமனைக்கு வருகிறார்கள். மீனா தனது அம்மாவிடம் ஹாஸ்பிடல் ஒருத்தவங்கள பாக்க வந்திருக்கோம் ஒரு கிலோ பழம் கூட வாங்கிட்டு வரல என கூற அதற்காக அவங்க உன் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட வரல என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை பார்த்து விட தனம் ஒளிந்து கொள்கிறார் அவர்கள் சென்றவுடன் தனத்தின் பெயரை கூப்பிட தனம் பதட்டமடைகிறார். இதனை அடுத்து டாக்டரிடம் சென்று தனக்கு நெஞ்சு வலிப்பது ஆகவும் மூன்று மாதமாக வலித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்ல அதற்கு டாக்டர் ஏன் இத்தனை நாளாக இதனைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை எனக் கூறி கேட்கிறார்.
மேலும் உங்க கூட யாரும் வரலையா என கேட்க இல்லை என தனம் சொல்லி விடுகிறார். பிறகு மருத்துவரிடம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே எனக் கேட்க அப்படி சொல்ல முடியாது டெஸ்ட் எடுத்திருக்கும் என சொல்ல ஏதோ இருந்தாலும் சொல்லுங்க டாக்டர் எனக்கு ஜஸ்ட் கேன்சர் இருக்கா என கேட்க டெஸ்ட் எடுத்திருக்கும் அப்புறம் தான் சொல்ல முடியும் என கூற நான் உயிருடன் இருப்பேனா எனக்கு கேட்கிறார்.
பிறகு நாளைக்கு வருமாறு அனுப்பி வைத்து விட இந்த நேரத்தில் தனம் இதனை நினைத்து வருத்தப்பட அதனை மீனா மற்றும் அவருடைய அம்மா பார்த்து விடுகிறார்கள். மீனா என்னக்கா இங்க இருக்கீங்க எப்ப மருத்துவமனைக்கு வந்தீங்க என கேட்க டெஸ்ட் எடுக்க தான் வந்தேன் என கூற அதற்கு தான் இன்னும் நாள் இருக்கிறது என சொல்கிறார். இவ்வாறு தனம் பேசுவதே சுத்தமாக சரியில்லாத காரணத்தினால் மீனாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது.
எனவே தனம் சென்று உடன் மருத்துவரை பார்த்த மீனா அக்காவிற்கு என்ன ஆச்சு என கேட்க நெஞ்சு வலிப்பதாக கூறினார். ஆமாம் என்னிடமும் சொன்னாங்க நான் மருத்துவமனைக்கு கூப்பிட்டதற்கு வரவே இல்லை என சொல்ல இவ்வளவு அசால்டா இருப்பீங்க அவங்களுக்கு நெஞ்சில் பெரிய கட்டிக்கு என கூற இதனால் மீனா அதிர்ச்சி அடைகிறார்.